வீடியோ : இவர் எல்லாம் ரன்கள் அடித்த எப்படி ஜெயிக்க முடியும் ; கடுப்பான ஹர்டிக் ;

நேற்று அகமதாபத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் அணிக்கு சிறப்பாக தொடக்க ஆட்டம் அமையவில்லை. இருப்பினும் அவ்வப்போது ரன்களை விளாசி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 177 ரன்களை அடித்துள்ளது குஜராத் அணி.

பின்பு 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தீரில் வெற்றி காத்திருந்தது. ஆமாம், தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இருப்பினும் சஞ்சு சாம்சன், ஹெட்மயேர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடிய அதிரடி ஆட்டத்தால் வெற்றியை கைப்பற்றியுள்ளது ராஜஸ்தான். 19.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை வித்தியாசத்தில் குஜராத் அணியை வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

அதனால் 4 போட்டிகளில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 6 புள்ளிகளுடன் குஜராத் அணி இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர். இந்த போட்டியை குஜராத் டைட்டன்ஸ் அணியின் பவுலர்கள் நினைத்திருந்தால் வெற்றியை கைப்பற்றிருக்க முடியும்.

ஏனென்றால் தொடக்க இரு முக்கியமான விக்கெட்டை பறிகொடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பின்னடைவை சந்தித்தது. அதுமட்டுமின்றி, இறுதி நேரத்திலும் குஜராத் அணி பவுலர்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர். குறிப்பாக முன்னணி வீரரான ஷமி வீசிய பந்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசினார்.

இதனை பார்த்த ஹர்டிக் பாண்டிய கடுப்பான நிலையில் ஷமி-யிடம் பேசிய வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

கடந்த ஐபிஎல் 2022 போட்டியில் அறிமுகம் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளனர். அதேபோல இந்த ஆண்டும் குஜராத் டைட்டன்ஸ் அணி தான் கோப்பையை வெல்லுமா ? குஜராத் அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் என்ன ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ளே COMMENTS பண்ணுங்க..!