சிங்கம் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது ; இனிமேல் மாஸ் தான் ; இந்திய அணி-க்கு தோல்வியே இல்லை ; முழு விவரம் இதோ ;

திரும்ப வந்துட்டேன் னு சொல்லு…. !!! ஆப்கானிஸ்தான் அணியை அடித்து தொம்சம் செய்தது இந்திய அணி. நேற்று அபுதாபி-யில் நடைபெற்ற போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதனால் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 210 ரன்களை அதிரடியாக விளையாடினார்கள். பின்னர் 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது ஆப்கானிஸ்தான் அணி. ஆனால் தோல்வி தான் காத்திருந்தது. ஏனென்றால் இறுதி ஓவர் வரை போராடி 7 விக்கெட்டை இழந்து 144 ரன்களை மட்டுமே அடித்துள்ளது.

அதனால் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய அணி. ஆனால் முதல் இரு போட்டிகளில் மோசமான நிலையில் இருந்தது இந்திய அணி. ஏனென்றால் பேட்டிங் சொல்லும் அளவுக்கு இல்லை, அதுமட்டுமின்றி ஆல் ரவுண்டரான ஹார்டிக் பாண்டிய அணியில் இருக்க கூடாது. அவர் விளையாட மாட்டார் என்று பல கருத்துகள் வெளியானது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளியாடியுள்ளார்….!! 13 பந்தில் 35 ரன்களை விளாசியுள்ளார். அதில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் அடித்துள்ளார்…!! ஹார்டிக் பாண்டிய என்றால் இப்படி தான் என்பதை நிரூபித்துவிட்டார்….!

பல கிரிக்கெட் ரசிகர்கள் அவரை (ஹார்டிக் பாண்டிய ) பற்றி பல தவறான தகவலை பகிர்ந்து வந்தனர். அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ஹார்டிக் பாண்டிய. கடந்த ஆண்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் அவரால் சரியாக பேட்டிங் , பவுலிங் சரியாகவே செய்யவில்லை. பேட்டிங் அப்போ அப்போ செய்தாலும், பவுலிங்கை செய்யவே விட்டுவிட்டார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் வெறும் பேட்டிங் மட்டுமே செய்துள்ளார்….!! இருந்தாலும் ஐசிசி டி20 உலககோப்பையோ போட்டியில் ஹார்டிக் பாண்டிய ஆல் ரவுண்டராக தேர்வாகியுள்ளார். அதனால் பல கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். நீண்ட நாட்கள் களித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஹார்டிக் பாண்டிய…..!!!