ஐயோ..! இவர் மட்டும் இல்லையென்றால் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கும் ; மாஸ் பண்ணிட்டாரு ; ரிஷாப் பண்ட் பேட்டி

0

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான ஐந்து டி-20 போட்டிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இதுவரை நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் தலா 2 போட்டியில் இரு அணிகளும் வென்றுள்ளனர். அதனால் நாளை நடைபெற உள்ள போட்டி மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.

4வது டி-20 போட்டி:

நேற்று நடந்த நான்காவது போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி வழக்கம் போல பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. வழக்கம் போல ருதுராஜ், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தனர்.

இருப்பினும் ஹார்டிக் பாண்டிய மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தன. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 169 ரன்களை அடித்தனர். அதில் ருதுராஜ் 5, இஷான் கிஷான் 27, ஸ்ரேயாஸ் ஐயர் 4, ரிஷாப் பண்ட் 17, ஹர்டிக் பாண்டிய 46, தினேஷ் கார்த்திக் 55 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது தென்னாபிரிக்கா அணி. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டம் அமையவில்லை. இருப்பினும் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தது தென்னாபிரிக்கா.

அதனால் 16.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 87 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்களோ, அவர்கள் தான் தொடரை கைப்பற்ற போகின்றனர்.

போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் கூறுகையில் ; “எப்பொழுதும் நம்ம விளையாடும் போது என்ன செய்கின்றோமோ..! அதற்கு ஏற்ப தான் முடிவுகள் வரும். எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ, அவர்கள் தான் போட்டியில் வெற்றி பெறுவார்கள்.”

“அடுத்த போட்டியில் ஆவது டாஸ் வென்று சரியான முடிவுகளை நான் எடுப்பேன். உண்மையிலும், ஹர்டிக் பாண்டிய விளையாடிய விதம் எனக்கு மிகவும் பிடித்தது. அதுமட்டுமின்றி, தினேஷ் கார்த்திக் ஆடிய அதிரடியான ஆட்டத்தால் தான் எங்கள் அணிக்கு ஒரு நம்பிக்கை வந்தது.”

“தனி நபராக ஒரு சில இடங்களில் தவறு செய்கிறேன், அதனை நிச்சியமாக திருத்திக்கொள்ள நினைக்கிறன். அடுத்த போட்டியில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here