தல தோனியை போல் ஹர்டிக் பாண்டிய பேசிய விதம் எனக்கு மிகவும் பிடித்தது ; அஸ்வின் ஓபன் டாக் ;

0

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றி ஒருநாள் போட்டிக்கான தொடர் இன்று முதல் தொடங்கியது. அதில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு நிதானமான தொடக்க ஆட்டம் அமைந்தது. சுப்மன் கில் மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் ஆட்டம் இழந்த பிறகு இந்திய அணியின் பார்ட்னெர்ஷிப்சரியாக அமையவில்லை. பின்பு ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை அடித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 306 ரன்களை அடித்துள்ளனர்.

இதில் ஷிகர் தவான் 72, சுப்மன் கில் 50, ஸ்ரேயாஸ் ஐயர் 80, ரிஷாப் பண்ட் 15, சூர்யகுமார் யாதவ் 4, சஞ்சு சாம்சன் 36, வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 308ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது நியூஸிலாந்து அணி.

டி-20 போட்டிக்கான தொடர்:

சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 போட்டிக்கான தொடரில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளனர். இதில் முதல் போட்டியும், இறுதி போட்டியும் மழை காரணமாக நடைபெற முடியாமல் போய்விட்டது. அதனால் பெஞ்ச் வீரர்களுக்கும் சரியாக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இந்திய அணியில் விளையாடாமல் பெஞ்ச்-ல் இருந்த சஞ்சு சாம்சன், உம்ரன் மாலிக் போன்ற வீரர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுந்தனர். அதற்கு பதிலளித்த இந்திய அணியின் கேப்டனாக ஹர்டிக் பாண்டிய கூறுகையில் ; ” இது ஒரு குறுகிய போட்டி அதனால் அடிக்கடி அணியை மாற்றி கொண்டு வாய்ப்பு கொடுப்பது சிரமம். அதுமட்டுமின்றி, அணியை தேர்வு செய்யும்போது நான் எப்பொழுது பயிற்சியாளரிடம் ஆலோசனை மேற்கொண்டு தான் முடிவுகளை எடுப்பேன் என்றும் கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.”

இதனை சுட்டிக்காட்டிய இந்திய அணியில் சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில் : ” ஹர்டிக் பாண்டிய, மற்றும் தோனி ஆகிய இருவருக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளது. அதுவம் சஞ்சு சாம்சன் பற்றிய கேள்விக்கு ஹர்டிக் பாண்டிய சொன்ன பதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுவும் தோனியை போலவே கேள்விக்கு பதில் சொன்னார். அதில் “நான் வீரர்களில் சிறுவன் தான். அதுமட்டுமின்றி, என்னுடைய ரூம் கதவு எப்பொழுது திறந்து தான் இருக்கும். யார் வேண்டுமானாலும் என்னிடம் வந்து பேசலாம், நானும் அவர்களுடன் நிச்சியமாக பேசுவேன். சஞ்சு சாம்சன் விளையாடவில்லை என்பது வருத்தமாக தான் இருக்கிறது. அவர் (சஞ்சு சாம்சன்) சிறந்த வீரர்தான் என்று நெஞ்சில் கைவைத்து ஹர்டிக் பாண்டிய சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று கூறியுள்ளார் அஸ்வின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here