பா.. என்ன அடி ; யார் சாமி நீ ? இப்படி வெளுத்து வாங்குற ? சூரியகுமார் யாதவை ஓரங்கட்டிய ஆல் – ரவுண்டர் இவர் தான் ;

ஆக்க்லாண்ட் மைதானத்தில் தொடங்கிய இன்றைய முதல் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு பொறுமையான தொடக்க ஆட்டம் அமைந்தது. முதல் 20 ஓவர் வரை பொறுமையாக விளையாடிய இந்திய அணிக்கு 100க்கு மேற்பட்ட ரன்களை அடித்தனர். ஷிகர் மற்றும் சுப்மன் கில் ஆட்டம் இழந்த பிறகு இந்திய அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடியதால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 306 ரன்களை அடித்தனர்.

அதில் ஷிகர் தவான் 72, ஸ்ரேயாஸ் ஐயர் 80, சுப்மன் கில் 50, ரிஷாப் பண்ட் 15, சூர்யகுமார் யாதவ் 4, சஞ்சு சாம்சன் 36, வாஷிங்டன் சுந்தர் 37* மற்றும் ஷர்டுல் தாகூர் 1 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 307 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூஸிலாந்து அணி. நியூஸிலாந்து அணி இதுவரை விளையாடிய 10 ஓவர் முடிவில் 42 ரன்களை அடித்த நிலையில் 1 விக்கெட்டை இழந்துள்ளது நியூஸிலாந்து அணி. இதில் பின் ஆலென் 22, டேவன் கான்வே 16*, கேன் வில்லியம்சன் 2* ரன்களை அடித்துள்ளனர்.

பட்டைய கிளப்பிய இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் :

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் சூரியகுமார் யாதவ் டி-20 போட்டியை போல அதிரடியாக விளையாடுவார் என்று பலர் எதிர்பார்த்து கொண்டு வந்தனர். ஆனால் ஒருநாள் போட்டிக்கும் சூர்யகுமார் யாதாவிற்கும் சரி இல்லாதது போல் 4 ரன்கள் அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார். ஆனால் இந்திய அணியின் ஆல் -ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சரியாக 45.5 ஓவரில் சஞ்சு சாம்சன் ஆட்டம் இழந்த பிறகு களமிறங்கினார். அதிரடியான வீரரை போல 360 டிகிரி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் போல அனைத்து திசையிலும் பவுண்டரிகளை விளாசினார் வாஷிங்டன்.

வாஷிங்டன் சுந்தர் டி-20 போட்டியில் விளையாடியது போல் 16 பந்தில் 37 ரன்களை விளாசியுள்ளார். அதில் 3 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் இதில் அடங்கும். இவரது பங்களிப்பு முக்கியமாக இருந்த காரணத்தால் இந்திய அணி 300க்கு மேற்பட்ட ரன்களை அடிக்க முடிந்தது.