சூரியகுமார் யதாவிற்கு பதிலாக இந்த வீரருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் ; சரியாக இருக்கும் ; தினேஷ் கார்த்திக் பேட்டி;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளனர்.

டி-20 போட்டிக்கான தொடர் :

இரு தினங்களுக்கு முன்பு இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்டிக் பாண்டிய சிறப்பாக தலைமை தாங்கி 1- 0 என்ற கணக்கில் டி-20 போட்டிக்கான தொடரில் நியூஸிலாந்து அணியை வென்றுள்ளது இந்திய.

தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் வீரர் :

இந்திய கிரிக்கெட் அணியில் பல வீரர்கள் விளையாடி வரும் நிலையில், ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு சுலபம் கிடையாது. அதுமட்டுமின்றி, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை என்றாலும் பிறகு இந்திய அணியில் விளையாடுவது சிரமமாக மாறிவிடும் என்பது தான் உண்மை. ஆனால் சர்வதேச டி-20 போட்டி விளையாட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் -க்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அவரது பங்களிப்பு பெரிய அளவில் இல்லை. சமீபத்தில் நடந்து முடிந்த மூன்று டி-20 போட்டிக்கான தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 13 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். மிடில் ஆர்டரில் இவரது பங்களிப்பு இல்லாமல் இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றனர். காரணம் என்ன ?

ஆனால் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு விளையாடி வரும் சஞ்சு சாம்சன்-க்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது தான் உண்மை. சஞ்சு சாம்சன் இறுதியாக விளையாடிய 5 சர்வதேச போட்டியில் ; 39, 18,77,30,15 ரன்களை அடித்துள்ளனர். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் : 24,64,1,13,0 ரன்களை அடித்துள்ளனர். சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன்-க்கு வாய்ப்பு கொடுக்கும் படி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் பினிஷர் தினேஷ் கார்த்திக் கூறுகையில் : “நான் சூர்யகுமார் யாதவ் -க்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடுவதை நான் பார்க்க வேண்டும். ஏனென்றால் வேகப்பந்து வீச்சாளர் பவுலிங் சிறப்பாக விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி, ஷார்ட் பிட்ச் பவுலிங்-ல் அதிரடியாக விளையாடி ரன்களை அடிப்பார் என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.”

டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவின் பங்களிப்பு இன்னும் ஒருநாள் போட்டியில் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் திணறிக்கொண்டு தான் வருகிறார். சூரியகுமார் யாதவ் இறுதியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டியில் : 27,16,13,9,8 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here