இவங்க இரண்டு பேரை நம்பிக்கொண்டு இருந்தால் இந்திய அணியால் உலகக்கோப்பையை வெல்ல முடியாது ; கபில் தேவ் ஓபன் டாக் ;

இந்திய கிரிக்கெட் அணி : சமீபத்தில் தான் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய சில நாட்களில் இப்பொழுது இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகின்றனர். இது போன்ற தொடர்களில் சிறப்பாக விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியால் உலககோப்பையை வெல்ல முடியவில்லை.

kapil Dev

ஆமாம், மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மட்டுமே அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளனர். அதனை அடுத்து விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் கேப்டனாக வழிநடத்திய இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ரோஹித் சர்மா மற்றும் விராட்கோலியின் கேப்டன்ஷி :

தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக விளையாடி வந்தார் விராட்கோலி. அவர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியது, ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. அதனை அடுத்து ரோஹித் சர்மாவை கேப்டனாக அறிவித்தால் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வெல்ல முடியும் என்று பலர் நினைத்தனர்.

அதற்கு முக்கியமான காரணம், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல் போட்டியில் சாம்பியன் படத்தை வென்றுள்ளனர். இதனை மனதில் வைத்து கொண்டு நிச்சியமாக ரோஹித் சர்மா உலககோப்பையையும் வென்று விடுவார் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

டி-20 உலகக்கோப்பை 2022 மட்டுமின்றி ஆசிய கோப்பை போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் வெளியேறியுள்ளது. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ” உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் பயிற்சியாளர், தேர்வாளர்கள் மற்றும் அணியின் நிர்வாகம் சரியான முடிவுகளை கையில் எடுக்க வேண்டும். ஒருவேளை நீங்க எல்லாரும் விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா மற்றும் ஏதாவது வீரர் சேர்ந்து உலகக்கோப்பையை வெல்ல உதவியாக இருப்பார்கள் என்று நினைத்தால் அது சத்தியமாக என்றும் நடக்காது. ஒரு அணியை முழுவதும் நம்ப வேண்டும்.”

“நம் அணியில் ஒரு சிலரை குறிப்பிட்டு இவர் போட்டியில் எப்படியாவது வென்று விடுவார் என்று சொல்ல முடியுமா ? ஆனால் நிச்சியமாக ஒரு அணியாக உலகக்கோப்பை போட்டிகளில் வெல்ல முடியும் என்று கூறியுள்ளார் கபில் தேவ்.”

மேலும் விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மாவை பற்றி பேசிய கபில் தேவ் கூறுகையில் : “ஒரு அணியில் எப்பொழுதும் இரு வீரர்கள் அணியின் நட்சத்திரமாக திகழ்வது வழக்கம். ஆனால் குறைந்தது 5 அல்லது 6 வீரர்கள் அப்படி உருவாக வேண்டும். ஏனென்றால், நாம் எப்பொழுதும் விராட்கோலி, ரோஹிட் சர்மாவை நம்பிக்கொண்டே இருக்க முடியாது. இளம் வீரர்கள் மேலே வந்து அணியில் இருக்கும் பொறுப்புகளுக்கு ஏற்ப விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார் கபில் தேவ்.”