ஆஸ்திரேலியா: இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த இரு (இந்திய மற்றும் இங்கிலாந்து) அணிகளும் 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் இந்திய அணி 12 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 10 போட்டிகளிலும் வென்றுள்ளனர்.
இந்திய அணியின் அட்டகாசமான பேட்டிங் :
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி டார்கெட் அதிரடியாக விளையாடினார்கள். ஆனால் வழக்கம் போல் கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா பார்ட்னெர்ஷிப் இந்திய அணிக்கு பயனளிக்கவில்லை. ஆனால் விராட்கோலி, ஹர்டிக் பாண்டியாவின் பார்ட்னெர்ஷிப் இந்திய அணிக்கு திருப்பு முனையாக மாறியது. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 168 ரன்களை அடித்தனர்.
அதில் கே.எல்.ராகுல் 5, ரோஹித் சர்மா 27, விராட்கோலி 50, சூர்யகுமார் யாதவ் 14, ஹர்டிக் பாண்டிய 63, ரிஷாப் பண்ட் 6 ரன்களை அடித்தனர். இப்பொழுது இங்கிலாந்து அணி 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகின்றனர்.
ஹர்டிக் பாண்டிய இறுதியாக செய்த தவறு :
18வது ஓவரில் இருந்து ஹர்டிக் பாண்டிய பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் அடிக்க தொடங்கினார். அதற்கு முக்கியமான காரணம் இந்திய அணிக்கு குறைவான ரன்கள் மட்டுமே இருந்தது. சரியாக 20வது ஓவரில் ஜோர்டான் வீசிய பந்தை எதிர்கொண்டார் ஹர்டிக் பாண்டிய. அதனை பவுண்டரி அடிக்க முயன்ற போது எதிர்பாராத வகையில் ஹர்டிக் பாண்டியாவின் கால் ஸ்டம்ப்-ல் அடித்ததால். அதனால் ஹிட்-விக்கெட் என்ற அடிப்படையில் விக்கெட்டை இழந்தார். அப்படி இல்லாதபட்சத்தில் அந்த பவுண்டரியும் இந்திய அணியும் ரன்களில் சேர்ந்திருக்கும். இதனை பார்த்த ஹர்டிக் பாண்டியாவின் மனைவி அதிர்ச்சியாகும் புகைப்படும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.