ஐபிஎல் 2021: வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் ரசிகர்கள் மிகவும்சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். அது ஒரு பக்கம் இருக்க நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் சின்ன தல சுரேஷ் ரெய்னா சென்னையில் பயிற்சியை ஆரம்பித்துள்ளனர். அதனால் நிச்சியம் கடந்த ஆண்டு போல் இல்லமால் இந்த ஆண்டு நல்ல ஒரு அணியாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சில இளம் வீரர்கள் ஹரி ஷங்கர், மெயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம் ஆகிய வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எடுத்துள்ளனர். அவர்களும் பயிற்சியை தல தோனியுடன் இணைந்து பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.
சென்னை சூப்பர் சூப்பர் அணியின் புதிய இளம் பௌலர் ஹரி ஷங்கர், இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவர் பயிற்சியின் போது தல தோனிக்கு பந்து வீசியுள்ளார் அப்பொழுது தோனி பெல்ட் அவுட் ஆகியுள்ளார். அதன் புகைப்படம் மிகவும் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த ஆண்டு எப்படியோ ஆனால் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா இணைந்துள்ளதால் நிச்சியம் நல்ல ஒரு பேட்டிங் பவர் இருக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றன. அதனால் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை மாற்று டெல்லி அணிகள் மொத உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றாலே எல்லோருக்கும் வயதாகிவிட்டது என்ற கருது பரவலாக இருக்கிறது. அதனை முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிச்சியம் இந்த ஆண்டு பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.