புத்திசாலி தனமாக செய்கிறோம் என்று சொதப்பிய பெங்களூர் அணி ; இது மட்டும் நடந்திருந்தால் RCB அணிக்கு சாதகமாக மாறியிருக்கும் ;

ஐபிஎல் : நேற்று 15வது போட்டியில் கே.எல்.அக்குள் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

வேறு வழியில்லாமல் களமிறங்கிய பெங்களூர் அணி அதிரடியாக விளையாடிய ரன்களை குவித்தனர். அதிலும் விராட்கோலி, டூப்ளஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய மூன்று வீரர்களும் அரைசதம் அடித்துள்ளனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் வெறும் மூன்று விக்கெட்டை இழந்த பெங்களூர் அணி 212 ரன்களை அடித்தனர்.

அதில் விராட்கோலி 61, டூப்ளஸிஸ் 79*, மேக்ஸ்வெல் 59 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி. தொடக்க வீரர் மற்றும் அதிரடி வீரரான மாயேர்ஸ் எந்த ரன்களையும் அடிக்காமல் விக்கெட்டை இழந்தார்.

அதனால் லக்னோ அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, தீபக் ஹூடா மற்றும் குர்னல் பாண்டிய போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டை பறிகொடுத்தனர். அதனால் லக்னோ அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், ஸ்டோனிஸ் மற்றும் பூரான் அதிரடியாக விளையாடி ரன்களை விளாசினார்கள்.

அதனால் லக்னோ அணிக்கு இறுதி நேரத்திலும் ரன்கள் குவிந்தன. பின்பு தொடர்ச்சியாக 9 விக்கெட்டை இழந்தது லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி. இறுதி ஓவரில் 5 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது லக்னோ. ஆனால் பேட்ஸ்மேன்கள் அனைவரும் விக்கெட்டை இழந்ததால் பவுலர்கள் தான் பேட்டிங் செய்தனர்.

இறுதி ஓவரில் 2 விக்கெட்டை கைப்பற்றியது பெங்களூர் அணி. பின்பு இறுதி பந்தில் 1 ரன்கள் அடித்தால் வெற்றி அல்லது போட்டி ட்ராவில் முடியும் என்ற நிலையில் இருந்தனர். அப்பொழுது பவுலிங் செய்த ஹர்ஷல் பிட்ச்-ல் பாதி தூரம் வந்த பிறகு ஸ்டம்ப்-ஐ பார்த்து பந்தை வீசினார் Non-ஸ்ட்ரைக்கர் பேட்ஸ்மேன்-ஐ விக்கெட்டை செய்ய.

ஆனால் ஹர்ஷல் பட்டேல் அதனை முன்பே செய்திருக்க வேண்டுமென்று கூறியதால், அது விக்கெட்டை கிடையாது என்று நடுவர்கள் அறிவித்தனர். அதனால் இறுதி பந்தில் ஒரு ரன்களை ஓடி தீரில் வெற்றியை கைப்பற்றியுள்ளது லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி. 4 போட்டிகளில் விளையாடிய லக்னோ மூன்று போட்டியில் வென்று புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றனர்.