சென்னை அணியால் ரஹானேவிற்கு அடித்த Jackpot ; என்ன தெரியுமா ? முழு விவரம் உள்ளே ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்கிய போட்டி மே மாதம் இறுதி வரை நடைபெற உள்ளதால் விறுவிறுப்பாக போட்டிக்கு பஞ்சம் இருக்காது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

இந்த ஆண்டு தொடக்கதில் முதல் போட்டியில் விளையாடியது குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. அதில் சென்னை அணி மோசமான நிலையில் தோல்வியை கைப்பற்றியது. இருப்பினும் அடுத்த போட்டியில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது சென்னை.

அதிலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் போட்டியில் மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் வெற்றியை கைப்பற்றியுள்ளது சென்னை. அதுமட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளில் அட்டகாசமாக விளையாடும் ரஹானே ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணியில் இடம்பெற்றுள்ளார்.

அதிலும் மும்பை அவரது (ரஹானே) ஹாம் மைதானம் என்ற காரணத்தால் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ரஹானே 27 பந்தில் 61 ரன்களை விளாசியுள்ளார்.

அதனால் அடுத்த வரும் போட்டிகளிலும் ரஹானேவின் பங்களிப்பு சென்னை அணியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான தொடரில் ரஹானேவிற்கு வாய்ப்பு கிடைக்குமா இல்லையா ? என்று பல கேள்விகள் எழுந்து வருகிறது.

ஏனென்றால், வருகின்ற ஜூன் 7ஆம் தேதி அன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தொடங்க இருக்கிறது. அதில் ஆஸ்திரேலியா அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோத உள்ளனர். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக அணியில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

பின்பு சூர்யகுமார் யாதவ் சமீப காலமாகவே விளையாடுவதே இல்லை. அதனால் ரஹானேவிற்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை இரவு 7:30 மணியளவில் தொடங்க உள்ள போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளனர்.

ரசிகர்களுக்கு கேள்வி :

ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி வருவதால் ரஹானேவிற்கு இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான அணியில் வாய்ப்பு கொடுத்தால் சரியாக இருக்குமா ? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here