நாங்க சரியாக விளையாடவில்லை என்றாலும், இவரது பவுலிங் இந்திய அணிக்கு பயத்தை ஏற்படுத்தியது ; ஜோஸ் பட்லர் ஓபன் டாக் ;

0

இந்திய மற்றும் இங்கிலாந்து சீரியஸ் தொடர் போட்டி:

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான தொடர்கள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடந்த இரண்டாவது டி-20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

இந்திய அணியின் பேட்டிங் :

இந்த முறை இஷான் கிஷானுக்கு பதிலாக ஒப்பனிங் பேட்ஸ்மேனாக ரிஷாப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் களமிறங்கி விளையாடினர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது தான் உண்மை. ஆனால் இருவரும் இணைந்து 50 க்கு மேற்பட்ட ரன்களை அடித்தனர்.

அதனால் இந்திய அணி முதல் ஐந்து ஓவரில் 50 ரன்களை அடிக்க முடிந்தது. ஆனால் அதன்பின்னர் இந்திய அணியின் விக்கெட்டை தொடர்ச்சியாக கைப்பற்றியது இங்கிலாந்து அணி. அதனால் சரியான பார்ட்னெர்ஷிப் இல்லாமல் தவித்தது இந்திய. இருப்பினும் ஜடேஜாவின் அதிரடியான ஆட்டத்தால் மட்டுமே ரன்கள் குவிந்தனர்.

ஆமாம், இறுதி ஓவர் வரை விளையாடிய இந்திய கிரிக்கெட் அணிக்கு 170 ரன்கள் அடித்தனர். அதில் அதிகபட்சமாக ரோஹித் 31, ரிஷாப் பண்ட் 26, சூரியகுமார் யாதவ் 15, ஹர்டிக் பாண்டிய 12, ரவீந்திர ஜடேஜா 46 ரன்களை அடித்துள்ளனர்.

இங்கிலாந்து அணி பேட்டிங் ;

பின்னர் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. ஆனால் முதல் போட்டியை போல தொடக்கத்திலேயே ஆட்டத்தை இழந்த ஜோஸ் பட்லர், அதனால் இந்திய அணிக்கு சற்று போட்டி சாதகமாக மாறியது. பின் பார்ட்னெர்ஷிப் அமையாமல் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து அணி.

அதனால் 17 ஓவர் முடிவில் 121 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதில் மொயின் அலி 35, டேவிட் மலன் 33 ரன்களை மட்டுமே அதிகபட்சமாக அடித்துள்ளனர்.

ஜோஸ் பட்லர் பேட்டி :

போட்டி முடிந்த பிறகு தோல்வியை பற்றி பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கூறுகையில் ; ” மிகவும் அதிர்ச்சியாக தான இருக்கிறது. நாங்கள் கொஞ்சம் கூட ரன்களை அடிக்கவே முயற்சி செய்யவே இல்லை, அதனால் தான் தோல்வியை சந்தித்தோம், இது எங்களுக்கு தேவையான தோல்வி தான்.”

“ஆனால் எனக்கில் (இங்கிலாந்து) பவுலர்கள் சிறப்பாக பவுலிங் செய்தனர். ஆமாம் அதிலும் குறிப்பாக க்ளீசோன் மற்றும் ஜோர்டான் ஆகிய இருவரும் அருமையாக பவுலிங் செய்தனர். க்ளீசோன் தொடர்ந்து விக்கெட்டை கைப்பற்றியதால் இந்தியா அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.”

“ஒருஓடியில் பவர் ப்லே-வில் மூன்று விக்கெட்டை இழந்தால், மீண்டும் ரன்களை அடிப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். அதுமட்டுமின்றி க்ளீசோன்-க்கு இதுதான் அறிமுகப்போட்டி மிகவும் அருமையாக பவுலிங் செய்துள்ளார். அதேபோல எப்பொழுதும் எதிர் அணிக்கு (இந்திய) அழுத்ததை ஏற்படுத்தி கொண்டே வருகிறார் கிறிஸ் ஜோர்டான்.”

“எங்களிடம் அதிக நேரம் இல்லை அடுத்த போட்டியில் எப்படி விளையாட வேண்டுமென்று யோசிப்பதற்கு என்று கூறியுள்ளார் ஜோஸ் பட்லர்.” இதுவரை நடந்த போட்டியில் 2 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளது இந்திய. நாளை நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி வென்றால் டி-20 போட்டிக்கான தொடரை கைப்பற்றிவிடும்.

டெஸ்ட் போட்டியில் தொடரை கைப்பற்றதா நிலையில், டி-20 தொடரை கைப்பற்றுமா ? இந்திய ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here