தோனி அணியில் இருக்கிறார் என்பதற்காக ஜடேஜா இப்படியெல்லாம் செய்யலாமா ; CSK முன்னாள் வீரர் கேள்வி ?

ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் அறிமுகம் ஆனது. அதில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காரணத்தால் இப்பொழுது ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 14ஆண்டுகள் நடந்து முடிந்த நிலையில் இந்த ஆண்டு 15வது சீசன் தொடங்கியுள்ளது.

கடந்த 26ஆம் தேதி முதல் தொடங்கிய ஐபிஎல் 2022 போட்டிகள் இதுவரை 14 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த முறை சென்னை அணி மிகவும் மோசமான நிலையில் உள்ளது தான் உண்மை. ஏனென்றால் இதுவரை மூன்று போட்டிகள் விளையாடி அதில் அனைத்திலும் தோல்வியை பெற்றுள்ளது சென்னை.

ஐபிஎல் ஆர்மபித்த 2008ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை 2021 தோனி தான் சென்னை அணியை சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார். இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி நான்கு முறை சாம்பியன் படத்தை கைப்பற்றியுள்ளது.. இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார் தோனி.

இப்பொழுது தோனியை அடுத்து ரவீந்திர ஜடேஜா சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். அணியில் தோனி இருந்தும் சென்னை அணி மோசமான நிலையில் உள்ளதால் சென்னை ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதனை பற்றி பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் அளித்த பேட்டியில் ; “எனக்கு தெரிந்து சென்னை அணியில் தோனி இன்னும் கேப்டனாக தான் இருக்கிறார். போட்டிகள் நடைபெறும் போது ஜடேஜாவை பார்த்தால் பவுண்டரி லைன் பக்கத்தில் பீல்டிங் செய்து வந்தார்.”

“அங்கு நின்று கொண்டு மற்ற வீரர்களை வழிநடத்துவது சுலபம் இல்லை. அந்த நேரத்தில் தோனிக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ஜடேஜா அவரது சுமையை தோனி மேல் வைப்பது சரியில்லை. ஜடேஜா ஒரு நம்பிக்கையான ஆல் தான். பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் போன்ற அனைத்து விஷயத்திலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.”

“அப்படி இருந்தும் சென்னைஎ அணி தோல்வியை சந்தித்து வருகிறது. அதனால் சக வீரர்களுக்கு முன்பு நின்று எப்படி விளையாட வேண்டும் என்று சொல்ல வேண்டும். இந்த முறை சென்னை அணியில் பவுலிங் சற்று பின்னடைவை சந்தித்து வருகின்றது. அதுமட்டுமின்றி, இந்த சீசனில் தோனி இருப்பதால் ஜடேஜாவிற்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.”