பாகிஸ்தான் அணிக்கு ஆபத்தாக இருக்க போகும் இந்திய வீரர் இவர் தான் ; இந்திய அணிக்கு நல்ல பலம் ; பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் பேட்டி ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் ஆறு அணிகள் விளையாட உள்ளதால் விறுவிறுப்பான தொடருக்கு பஞ்சம் இருக்காது.

ஆசிய கோப்பையில் பங்கேற்க போகும் முக்கியமான அணிகள் :

இந்த முறை மொத்தம் ஆறு அணிகளை கொண்டு விளையாட உள்ளனர். அதில் பாகிஸ்தான், இந்திய, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற அணிகள் உறுதியான நிலையில் இறுதி இடத்திற்கு ஹாங் காங், சிங்கப்பூர், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் தகுதி சுற்று போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

அதில் ஹாங் காங் அணி முதல் இடத்திலும், அரபு அணி இரண்டாவது இடத்தில் உள்ளனர். இதில் எந்த அணி ஆறாவதாக இடம்பெற போகிறார்கள் என்ற ஆர்வம் பெரிய அளவில் எழுந்துள்ளது.

இந்திய மற்றும் பாகிஸ்தான் மோதல்:

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று நடைபெற போகின்ற போட்டிக்காக காத்திருக்கின்றனர். ஆமாம், அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை டி-20 போட்டிகளில் இந்திய அணி மோசமான நிலையில் தோல்வியை பெற்றது.

அதனால் இந்த முறை எப்படியாவது போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்று தவிரமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு வருகின்றனர். இன்னும் சில தினங்களில் யா பேர் கொண்ட ஆசிய கோப்பையில் விளையாட போகும் இந்திய வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்ள போகின்றனர்.

இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் நேரத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளை பற்றி பேச்சு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் “ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் விராட்கோலி ஆகிய மூன்று வீரர்களும் எனக்கு பிடித்த வீரர்கள் தான். ஆனால், இப்பொழுது எனக்கு மிகவும் பிடித்த வீரர்களில் ஒருவர் தான் சூரியகுமார் யாதவ். அதுவும் குறிப்பாக ஷார்ட் போர்மட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.”

“நான் சூரியகுமார் யாதவ் முதல் முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடும்போது பார்த்துள்ளேன். அப்பொழுது 7 அல்லது 8வதாக பேட்டிங் செய்து வந்துள்ளார். அவரது ஷாட்ஸ் ஒன்றும் சுலபமாக அடித்து விட முடியாது. அவரது பங்களிப்பு இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று, மற்ற வீரர்களை காட்டிலும் இவரது விளையாட்டு நிச்சியமாக அருமையாக இருக்கும்.”

“அதனால் நிச்சியமாக சுழல் பந்து வீச்சாளர் அல்லது வேகப்பந்து வீச்சாளர்கள் யாராக இருந்தாலும் நிச்சியமாக அவர்களுக்கு ஆபத்து தான். ஏனென்றால், இவர் (சூரியகுமார் யாதவ்) அனைத்து திசையிலும் பேட்டிங் செய்ய கூடிய திறமை இவரிடம் உள்ளது என்று கூறியுள்ளார் வாசிம் அக்ரம்.” இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளுக்கு எதிரான டி-20 போட்டிகளில் அதிரடியாக விளையாடி ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியகுமார் யாதவ் கடந்த ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை டி-20 2021 போட்டிகளில் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here