தினேஷ் கார்த்திக் அணியில் இருக்கும்போது ..! இவருக்கு மட்டும் இடம் இல்லையா ; சுரேஷ் ரெய்னா ஓபன் டாக் ;

0

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா :

கடந்த ஜனவரி மாதத்தில் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகள் நடந்து. அதில் மூன்று டெஸ்ட் போட்டிகள் மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெறும் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வென்றது……!

அதன்பின்னர் வருகின்ற ஜூன் 9ஆம் தேதி முதல் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் விளையாட போகும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை சமீபத்தில் தான் வெளியிட்டது பிசிசிஐ. அதில் பல இளம் வீரர்களுக்கு ஐபிஎல் 2022 போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் விவரம் :

கே.எல்.ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹார்டிக் பாண்டிய, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ரவி பிஷானி,புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், ஆவேஷ் கான், அர்சத்தீப் சிங், உம்ரன் மலிக்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் சென்னை அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான அணியை அறிவித்த பிறகு சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். இவரை அணியில் இருந்து வெளியேற்றியது சரியாக தெரியவில்லை என்று கூறியுள்ளார் ரெய்னா.”

மேலும் பேசிய சுரேஷ் ரெய்னா ; ” நிச்சியமாக ஷிகர் தவான் அணியை பார்த்த பிறகு அதிர்ச்சியாக தான் இருப்பார். ஏனென்றால் அனைத்து விதமான கேப்டன்களுக்கும் அவரை போன்ற ஒரு வீரர் அணியில் நிச்சியமாக தேவைப்படும். அவர் எப்பொழுது இந்திய அணியில் இருந்தாலும் சந்தோஷமாக இருக்கும்.”

“அதுமட்டுமின்றி, டஉள்ளூர் விளையாட்டிலும், சர்வதேச போட்டிகளிலும் ரன்களை அடித்துக்கொண்டு தான் வருகிறார். தினேஷ் கார்த்திக்-ஐ மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். அதேபோல தான் ஷிகர் தவானுக்கும் அணியில் விளையாட அதிக உரிமை உள்ளது.”

கடந்த மூன்று , நான்கு ஆண்டுகளாக அதிக ரன்களை அடித்து வருகிறார். ஒருசில இடங்களில் தடங்கல் ஏற்படுவது சாதாரணமான விஷயம் தான். ஆனால் இப்படி செய்வது நிச்சியமாக அதிர்ச்சியாக தான் இருக்கும் என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா..!”

சின்ன தல சொன்னது போல ஷிகர் தவான் இந்திய அணியில் இடம்பெற்றிருக்க வேண்டுமா ? இல்லையா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பண்ணுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here