பும்ராவை விட சிறப்பாக பவுலிங் செய்கிறார் ; வேற லெவல் பவுலிங் ; இந்திய வீரரை புகழ்ந்து பேசிய முன்னாள் இந்திய வீரர் ;

நேற்று மதியம் 2 மணியளவில் தொடங்கியது கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், தெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும். அதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். ஆனால் அதில் ஒரு பயனும் இல்லாமல் போனது.

ஆமாம்…முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 287 ரன்களை அடித்தனர். பின்னர் 288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி, இறுதி ஓவர் வரை போராடி நான்கு பந்து மீதமுள்ள நிலையில் அனைத்து விக்கெட்டை இழந்து 283 ரன்களை அடித்தனர்.

அதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது தென்னாபிரிக்கா அணி. அதுமட்டுமின்றி, 3 – 0 என்ற கணக்கில் அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் தென்னாபிரிக்கா அணி வென்று சாதனை படைத்துள்ளது. அதேநேரத்தில் இந்திய அணி மோசமான நிலையில் உள்ளது.

முதல் இரு போட்டிகளில் மாற்றங்கள் ஏதும் செய்யாமல் விளையாடியது இந்திய அணி. ஆனால் மூன்றாவது போட்டியில் நான்கு மாற்றங்களுடன் களமிறங்கியது. அதில் ஒருவர் தான் தீபக் சஹார். மூன்றாவது போட்டியில் களமிறங்கிய தீபக் சஹார் சிறப்பாக பவுலிங் செய்து 2 விக்கெட்டை கைப்பற்றினார்.

அதுமட்டுமின்றி, பேட்டிங் செய்து 54 ரன்களை அடித்துள்ளார். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் அளித்த பேட்டியில் ; உண்மையிலும் தீபக் சஹாரின் பந்து வீசி மிகவும் அசத்தலாக இருந்தது. அதுமட்டுமின்றி, அவருடைய பந்து வீச்சால் மலன் மற்றும் மார்க்ரம் போன்ற இரு முக்கியமான பேட்ஸ்மேன்களை விக்கெட்டை கைப்பற்றினார்.

அவர் (தீபக் சஹார்) பவுலிங் செய்த அனைத்து பந்துகளும் விதவிதமாக இருந்தது, அதனால் தான் தீபக் சஹார் அணியில் இருக்கிறார். இருந்தாலும் இவருடைய பவுலிங்கை முன்பு நடந்த இரு போட்டிகளில் ஒப்பிட்டு பேச முடியாது. அனால் புவனேஸ்வர் குமார் முதல் இரண்டு போட்டிகளிலும் அவரது பவுலிங் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக செயல்படவில்லை.

ஆனால் தீபக் சஹாரை பாராட்டியே ஆக வேண்டும், இந்திய அணிக்கு தேவையான வீரராக தீபக் சஹார் உள்ளார் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர்.

கிரிக்கெட் ரசிகர்களே..! இந்திய அணியில் தீபக் சஹாருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமா ?? இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பகுதியில் மறக்காமல் பதிவு செய்யுங்கள்…!