ரொம்ப ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி வருகிறார் ; ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவரது விளையாட்டு இல்லை ; முன்னாள் வீரர் உறுதி ;

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சந்தித்த தோல்வியில் இருந்து இன்னும் இந்திய அணி மீண்டு வரவில்லை. ஆமாம்…! டெஸ்ட் போட்டியில் ஆவது 1- 2 என்ற கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்றது இந்திய. ஆனால் ஒருநாள் போட்டியில் 0 – 3 என்ற கணக்கில் வாஷ்அவுட் செய்தது தென்னாபிரிக்கா அணி.

அதனை தொடர்ந்து வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் போட்டிகள். அதில் இந்திய அணி வெல்லுமா ?? இல்லையா என்ற கேள்வி மட்டுமின்றி, இந்திய அணி நிச்சியமாக வெல்ல வேண்டும் என்று அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற தோல்வியை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சரி செய்யவேண்டும். இரு தினங்களுக்கு முன்பு தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சுழல் பந்து வீச்சாளரை பற்றி அவரது கருத்தை பகிர்ந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல் கூறியுள்ளார். இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹாலை பற்றி கூறுகையில் ; யுஸ்வேந்திர சஹாலின் வேலை மிடில் ஆர்டரில் விக்கெட்டை கைப்பற்றுவது தான். ஆனால் அதில் அவர் வெற்றிகரமான வீரராக இல்லை.

ஒரு கேப்டனாக நான் நிச்சியமாக அதனை எதிர்பார்ப்பேன். ஏனென்றால் அதிக ஆண்டுகளாக விளையாடி வருகிறார் யுஸ்வேந்திர சஹால். நிச்சியமாக இப்பொழுது யுஸ்வேந்திர சஹாலுக்கு அழுத்தம் ஏற்படும். ஏனென்றால் இந்திய அணியில் ராகுல் சஹார் மற்றும் ரவி பிஷோனி ஆகிய இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

அதனால் இந்திய மற்றும் சஹால் ஆகிய இருவரும் மிடில் ஆர்டரில் விக்கெட்டை கைப்பற்றுவதை பற்றி யோசிக்க வேண்டும். குறைந்தது 10 ஓவர் ஆவது பவுலிங் செய்யவில்லை என்றால் எதிர்பார்த்த அளவிற்கு அவர் இல்லை என்பது தான் உண்மை என்று கூறியுள்ளார் பார்த்திவ் பட்டேல். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார் யுஸ்வேந்திர சஹால்.

தோனி ஓய்வு பெற்ற பிறகு யுஸ்வேந்திர சஹாலுக்கு சரியாக அணியில் வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. அதுதான் உண்மை. ஆனால் நீண்ட நாட்கள் கழித்து தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் விளையாட ஆரம்பித்துள்ளார் யுஸ்வேந்திர சஹால்.