இவருடைய அணுகுமுறை சிறப்பாக இருக்கும் ; இந்த ஆண்டு போட்டியில் அவரது விளையாட்டில் தெறிக்க விட போகிறார் ; ரவீந்திரன் அஸ்வின் பேட்டி

0

ஐபிஎல் டி-20 ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் வருகின்ற மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதாவது இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர்.

இந்த முறை புதிய இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் மிகப்பெரிய அளவில் ஏலம் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் பல வீரர்களை வேவ்வேறு அணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல தான் தமிழக வீரரான அஸ்வின் முதல் ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் 2008 முதல் 2015ஆம் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் விளையாடி வந்துள்ளார்.

பின்னர், இரு ஆண்டுகள் பஞ்சாப் அணியிலும், இரு ஆண்டுகள் டெல்லி கேபிட்டல்ஸ் அணியிலும் விளையாடி வந்துள்ளார் அஸ்வின். இந்த ஆண்டு ஏலத்தில் பங்கேற்க ரவிச்சந்திரன் அஸ்வின் 5 கோடி விலை கொடுத்து வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இதனை பற்றி பேசிய அஸ்வின் ; எனக்கு தெரிந்து சஞ்சு சாம்சன் அணுகுமுறை எப்பொழுது சிறப்பாக இருக்கும். எப்பொழுது என்ன பிரச்சனையாக இருந்தாலும், இதுதான் என்று வெளிப்படையாக பேச கூடிய ஒரு வீரர் தான் சஞ்சு சாம்சன். ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமின்றி விக்கெட் கீப்பரிலும் சிறப்பாக விளையாடிய வருகிறார்.

இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக சஞ்சு சாம்சன்னுக்கு இருக்கும் என்று கூறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பற்றி பேசிய அஸ்வின் ; நான் அணியில் இணைந்து விளையாட உள்ளேன். எனக்கு எப்பொழுதும் கிரிக்கெட் போட்டிகளை பற்றி பேச அதிகமாக பிடிக்கும்.

அதுமட்டுமின்றி என்னுடைய அனுபத்தை நான் மற்ற வீரர்களிடம் பகிர்வதும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் உள்ளே இருந்து அணிக்கு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here