திரும்ப வந்துட்டேனு சொல்லு ; ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா ; ஆனால் ப்ளேயர் இல்லை ;

0

ஐபிஎல் 15வது சீசன் வருகின்ற மார்ச் 26ஆம்தேதி, அதாவது வருகின்ற சனிக்கிழமை முதல் தொடங்க உள்ளது ஐபிஎல் டி-20 அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதனை ஆவலோடு எதிர்பார்த்து கருத்திருக்கின்றனர். இருப்பினும் சில ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்..!

அதற்கு முக்கியமான காரணம் , இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டியில் சுரேஷ் ரெய்னா இல்லாதது தான். ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து சென்னை அணியில் விளையாடி வந்தவர் சுரேஷ் ரெய்னா. அதுமட்டுமின்றி தோனியின் நெருங்கிய நண்பராகவும், சென்னை அணியின் துணை கேப்டனாகவும் வளம் வந்துள்ளார் என்பது தான் உண்மை.

ஆனால் கடந்த ஆண்டு சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. அதுமட்டுமின்றி சுரேஷ் ரெய்னாவுக்கு முதுகில் அடிபட்ட காரணத்தால் அவருக்கு அதிலாக ராபின் உத்தப்பா அணியில் இடம்பெற்று விளையாடினார்.

அதனால் சுரேஷ் ரெய்னாவை சென்னை அணி தக்கவைத்து கொள்ளவும் இல்லை, ஐபிஎல் 2022 மெகா ஏலத்திலும் கைப்பற்ற நினைக்கவில்லை. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். சுரேஷ் ரெய்னா இல்லாமல் ஐபிஎல் ஆ? மிஸ்டர் ஐபிஎல் இல்லாமல் ஐபிஎல் போட்டியா ?? என்று பலர் அவரவர் வருத்தத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அப்படி இருக்கும் சூழலில் சுரேஷ் ரெய்னா மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி ஆகிய இருவரும் ஐபிஎல் டி-20 2022 போட்டிகளில் கமென்டரியாக இருக்க போவதாக உறுதியான தகவல் வெளியானது. கையில் பேட் எடுத்து ரன்களை அடித்த தொம்சம் செய்த ரெய்னா, இந்த முறை மைக் எடுப்பது வருத்தமாக தான் இருக்கிறது.

அதுமட்டுமின்றி, சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி விலகிய நாட்களில் தான் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார். அப்படி இருக்கும் சூழலில் தோனி எப்பொழுது ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கறாரோ அன்று தான் நானும் அறிவிப்பேன் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

அப்படி பார்த்தால் இதற்கு மேல் சுரேஷ் ரெய்னா நிச்சியமாக பேட்டை கையில் எடுக்கும் வாய்ப்பு என்பது மிகவும் குறைவு தான். ஏனென்றால் 40 வயதான மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகினால் அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. தோனி அவரால் முடிந்த வரை சிஎஸ்கே அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார் என்பதில் சந்தேகமில்லை.

இருப்பினும் சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா மற்றும் மகேந்திர சிங் தோனி இடத்தை யார் சரியாய் பூர்த்தி செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். தோனி இந்த ஆண்டுடன் ஓய்வை அறிவிப்பாரா ?? இல்லையா ?? உங்கள் கருத்தை மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here