ருதுராஜ் கெய்க்வாட் -டுடன் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் செய்ய போவது இவர் தானாம் ; இது நம்ம List- லையே இல்லையே ;

ஐபிஎல் டி-20 ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2022 போட்டிகள் வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த முறை மொத்தம் 10 அணிகளை கொண்டு விளையாட உள்ளது ஐபிஎல். அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

ஐபிஎல் டி-20 போட்டிகள் ஆரம்பித்த நிலையில் சென்னை அணியை பற்றி செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கிறது. அதில் மிகபெரிய ஒரு கேள்வி ஓப்பனிங் பேட்ஸ்மேன் யார் என்பது தான். ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் ருதுராஜ் மற்றும் டூப்ளஸிஸ் ஆகிய இருவரும் களமிறங்கி ரன்களை குவித்தனர்.

இருப்பினும் இந்த முறை மெகா ஏலம் நடந்த காரணத்தால் வெறும் நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியது. அதனால் ருதுராஜ், ரவீந்திர ஜடேஜா , மகேந்திர சிங் டோனி மற்றும் மொயின் அலி போன்ற நான்கு வீரர்களை தக்கவைத்தது சென்னை.

அதனால் டூப்ளஸிஸ் ஐ-தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனது. அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள். அதனால் இப்பொழுது ருதுராஜ் கெய்க்வாட்-டுடன் யார் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதில் மொயின் அலி-யின் பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 போட்டியில் சென்னை அணியில் அறிமுகம் ஆனார் மொயின் அலி. ஆனால் மொயின் அலியின் அதிரடி பேட்டிங் மற்றும் அசத்தலான பவுலிங் சென்னை அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.

அதுவும் சுரேஷ் ரெய்னா பேட்டிங் செய்து வந்த 3வது இடத்தில் பேட்டிங் செய்து வந்துள்ளார் மொயின் அலி. அதுமட்டுமின்றி மொயின் அலி இடது கை பேட்ஸ்மேன், ருதுராஜ் கெய்க்வாட் வலது கை பேட்ஸ்மேன் அதனால் இந்த காம்பினேஷன் சரியாக இருக்கும் என்று தெரிகிறது.

அதுமட்டுமின்றி டூப்ளஸிஸ் இடத்தில் சரியாக பேட்ஸ்மேன் களமிறங்கினால் தான் சிறந்த பார்ட்னெர்ஷிப் அமையவது மிகவும் முக்கியமான ஒன்று. இருப்பினும் மொயின் அலி எப்படி பேட்டிங் செய்வார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதனால் புதிய வீரரான கான்வே ஓப்பனிங் செய்வதை விட மொயின் அலி தான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என்று சில தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு மொயின் அலி மொத்தமாக 15 போட்டிகளில் விளையாடி 357 ரன்களை அடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 58 ரன்களை விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி, 15 போட்டிகளில் மொத்தம் 25 ஓவர் பவுலிங் செய்துள்ளார் அதில் 6 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

சென்னை ரசிகர்களே நீங்க சொல்லுங்க யார் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என்று உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!