வீடியோ : இதை மட்டும் தோனி பார்த்தால் நிச்சியமாக பெருமை படுவார் ; ரிஷாப் பண்ட் செய்த செயல் இணையத்தை கலக்கி வருகிறது ;

0

பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிக்கான தொடர் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை நடந்து முடிந்த மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் 2 – 1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி தொடரை வென்றுள்ளனர்.அதனை அடுத்து நேற்றுடன் முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கின்றனர். டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 404 ரன்களை அடித்தனர். பின்பு 405 ரன்களுக்கு மேல் அடித்தாக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது பங்களாதேஷ் அணி. ஆனால் முதல் இன்னிங்ஸ் விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் எதுவும் அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்த காரணத்தால் வெறும் 150 ரன்களை மட்டுமே அடித்தது பங்களாதேஷ் அணி.

அதனால் இந்திய கிரிக்கெட் அணி 254 ரன்கள் முன்னிலையில் இருந்தனர். பின்பு இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. வழக்கம் போல் கே.எல்.ராகுல் 23 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், சுப்மன் கில் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் தலா ஒரு சதம் அடித்தனர். அதனால் 61.4 ஓவர் முடிவில் 258 ரன்களை அடித்த இந்திய கிரிக்கெட் அணி declare செய்தனர்.

பின்பு இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய பங்களாதேஷ் அணியால் 324 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் இந்திய கிரிக்கெட் அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியுள்ளது.

இதற்கிடையில் ரிஷாப் பண்ட் செய்த ஸ்டும்ப்பிங் இணையத்தை கலக்கி வருகிறது…! அப்படி என்ன நடந்தது ?

இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி விளையாடி கொண்டு இருந்த பங்களாதேஷ் அணி. சரியாக 87.5 ஓவரில் அக்சர் பட்டேல் பவுலிங்கை பங்களாதேஷ் வீரர் நூருல் ஹசன் எதிர்கொண்டார். அப்பொழுது பந்தை அடிக்க முயன்ற போது, மிஸ் ஆகிய நிலையில் ரிஷாப் பண்ட் -கையில் பந்து சென்றது. துல்லியமாக யோசனை செய்த ரிஷாப் பண்ட் விரைவாக ஸ்டும்ப்பிங் செய்துள்ளார். ஒரு நொடி தாமதம் ஆகியிருந்தால் விக்கெட்டை கைப்பற்றிருக்க முடியாது.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் பினிஷர் தினேஷ் கார்த்திக் கூறுகையில் : ” தோனிக்கு அடுத்த படியாக நாம் ரிஷாப் பண்ட் -ஐ பார்த்து வருகிறோம். நிச்சியமாக இந்த ஸ்டும்ப்பிங்-ஐ பார்த்தால் மகேந்திர சிங் தோனி அவர்கள் பெருமை படுவார். ரிஷாப் பண்ட் பந்தை பிடிக்க தயாராக இருந்தார். அதேபோல பந்து பேட்டில் படாமல் ரிஷாப் பண்ட் கையிற்கு சென்றது. அதனால் விரைவாக ஸ்டும்பிற்கு கையை கொண்டு வந்தார்.”

“ஒரு விக்கெட் கீப்பராக எப்பொழுது பந்து எப்படி வரும் என்பதை தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் தோனி எப்பொழுதும் அதில் சிறந்து விளங்குகிறார். இதுபோன்ற சில விஷயங்களை தோனியிடம் இருந்து ரிஷாப் பண்ட் கற்றுள்ளார் என்று தினேஷ் கார்த்திக் பேட்டியளித்துள்ளார்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here