இவரை வாங்கியே ஆக வேண்டும் ; CSK அணியின் திட்டம் இதுதான் ; இந்தமுறை மிஸ் ஆகாது ;

0

ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் ரசிகர்கள் இடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்ற காரணத்தால் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 15 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் தொடரில் அதிக முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக திகழ்கிறது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகள் அறிமுகம் ஆனதில் இருந்து இதுவரை மகேந்திர சிங் தோனி தான் தலைமை தாங்கி வருகிறார். இதுவரை மொத்தம் 4 முறை கோப்பையை வென்றுள்ளது சென்னை அணி. ஆனால் கடந்த ஆண்டு ஏலத்தில் சென்னை அணி தேர்வு செய்ததில் சில தவறுகள் ஏற்பட்டது.

அதனால் பவுலிங் மிகவும் பலவீனமாக இருந்தது. அதுமட்டுமின்றி, வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் கடந்த ஆண்டு 2022 தொடர் முழுவதும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. ஐபிஎல் 2022ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடிய வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்றது. அதனால் புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் இடம்பெற்ற நிலையில் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது சென்னை.

ஐபிஎல் 2023 ஏலம் :

நாளை கேரளாவில் ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து அணிகளும் எந்த வீரர்களை தேர்வு செய்தால் சிறப்பாக இருக்கும் என்று ஆலோசனை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் இருக்கும் 10 அணிகளும் அவரவர் ஹாம் மைதானத்தில் விளையாட உள்ளதாக பிசிசிஐ உறுதியான தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதனால் சரியான வீரர்களை தேர்வு செய்ய வேண்டுமென்று அனைத்து அணிகளும் தீவிரமான ஆலோசனையில் இருக்கின்றனர்.

ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் : சென்னை சூப்பர் கிங்ஸ் :

இந்த முறை அவரவர் ஹாம் மைதானத்தில் விளையாட போகிறதால் சென்னை அணிக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆமாம், சேப்பாக்கம் மைதானத்தில் லெக் ஸ்பின்னருடைய பந்து வீச்சு மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் இம்ரான் தாகீர் போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இல்லாத காரணத்தால், ஏதாவது லெக் ஸ்பின்னரை சென்னை அணி நிச்சியமாக தேர்வு செய்யும்.

அதுமட்டுமின்றி கடந்த ஐபிஎல் 2022 போட்டிகளில் பவுலிங் மிகவும் மோசமான நிலையில் இருந்த காரணத்தால் சரியான வீரர்களை தேர்வு செய்யுமா சென்னை அணி என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, ப்ராவோ அணியில் இருந்து விலகிய நிலையில் சாம் கரன் போன்ற முன்னணி வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது சென்னை. இன்னும் 20.45 கோடியை கையில் வைத்திருக்கும் சென்னையால் சாம் கரனை கைப்பற்ற முடியுமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here