டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறிய தொடக்க வீரர் ; அதிர்ச்சியில் இருக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ; இவருக்கு மட்டும் தான் இப்படி நடக்குமா ?

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஒருநாள் போட்டிக்கான தொடர் :

லிட்டன் தாஸ் தலைமையிலான பங்களாதேஷ் கிரிக்கெட் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. அதில் 2 -1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த பங்களாதேஷ் அணி தொடரை வென்றுள்ளனர். இதில், இரண்டாவது ஒருநாள் போட்டிகள் நடைபெற்று கொண்டு இருந்த நேரத்தில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டது. அதனால் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும், முதல் டெஸ்ட் போட்டியிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

டெஸ்ட் போட்டிக்கான தொடர் :

காயம் காரணமாக ரோஹித் சர்மாவிற்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக விளையாடி வருகிறார். முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. இதனை அடுத்து வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி முதல் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடமாட்டார். அவரை தேவையில்லை விளையாட வைத்து ரிஸ்க் எடுக்க போவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு அவ்வப்போது காயம் ஏற்படுவது வழக்கம் தான். ஆனால் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மாவிற்கு தான் அதிகம். கடந்த ஆண்டு இறுதியில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டியிலும், 2022ல் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 5 டி-20 போட்டியிலும், 2022 ஜூலை மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் ஷர்மாவிற்கு காயம் காரணமாக ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா கேப்டனாக மற்றுமின்றி, தொடக்க வீரராகவும் விளையாடி வருகிறார். அதனால் அவரது பங்களிப்பு இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்திய கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான அணியின் நிரந்திரமான கேப்டனாக யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here