இந்த பையனை சரியாக தயார் செய்தால் நிச்சியமாக அணிக்கு தோல்வியே இருக்காது ; இலங்கை அணிக்கு Hint கொடுத்த தோனி ;

0

ஐபிஎல் : கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் படி ஐபிஎல் டி-20 லீக் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து போட்டிகளில் குஜராத் அணி முதல் இடத்திலும், சென்னை அணி இரண்டாவது இடத்திலும், லக்னோ அணி மூன்றாவது இடத்திலும், ராஜஸ்தான் அணி நான்காவது இடத்திலும் இருக்கின்றனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 139 ரன்களை அடித்தனர். அதில் நேஹால் வதேரா, சூரியகுமார் யாதவ் மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் போன்ற வீரர்கள் அடித்து ரன்களை குவித்தனர்.

பின்பு பேட்டிங் செய்த சென்னை அணி 17.4 ஓவர் ,முடிவில் 140 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதுமட்டுமின்றி, 13புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது சென்னை. இனிவரும் போட்டிகளில் ஏதேனும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெற அதிக வாய்ப்பு இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இலங்கை அணிக்கு HINT கொடுத்த தோனி :

மும்பை மற்றும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் இறுதி ஓவர் பவுலிங் செய்த இளம் வீரரான மதீஷா பாத்திரான 2 விக்கெட்டை கைப்பற்றியது மட்டுமின்றி வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். அதுமட்டுமின்றி 7 போட்டிகளில் விளையாடிய பாத்திரான 10 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

அதனால் சென்னை அணியின் டெத் பவுலராக உருமாறியுள்ளார் பாத்திரன. இவரை பற்றி சமீபத்தில் பேசிய தோனி கூறுகையில் : “என்னுடைய தனிப்பட்ட எண்ணம், பாத்திரன டெஸ்ட் போட்டிகளில் விளையாட கூடாது. குறைவான ஒருநாள் போட்டிகளில் பங்களிப்பு கொடுத்து சிறப்பாக விளையாட வேண்டும். முதலில் ஐசிசி போட்டிகளில் விளையாட வைக்க முயற்சி செய்ய வேண்டும். நிச்சியமாக இவர் (பாத்திரன) இலங்கை அணியின் எதிர்காலம் தான் என்று கூறியுள்ளார் மகேந்திர சிங் தோனி.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here