அவரது விக்கெட்டை கைப்பற்றிருக்க வேண்டும் ; அவர் அடிக்க தொடங்கிய பிறகு நிறுத்துவது அவ்வளவு சுலபம் கிடையாது ; டூப்ளஸிஸ் ஓபன் டாக்;

ஐபிஎல் 2023 : நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை. இருப்பினும் டூப்ளஸிஸ், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 199 ரன்களை விளாசினர்.

அதில் விராட்கோலி 1, டூப்ளஸிஸ் 65, அனுஜ் ராவத் 6, மேக்ஸ்வெல் 68, தினேஷ் கார்த்திக் 30, கேதர் ஜாதவ் 12* ரன்களை அடித்துள்ளனர். பின்பு 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டத்தை இஷான் கிஷான் ஏற்படுத்தி கொடுத்தார்.

பின்பு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சூரியகுமார் யாதவ் அதிரடியாக ரன்களை குவித்தனர். அதனால் 16.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 200 ரன்களை அடித்துள்ளனர். அதில் இஷான் கிஷான் 42, ரோஹித் சர்மா 7, சூர்யகுமார் யாதவ் 83, நேஹால் வதேரா 52*, கேமரூன் க்ரீன் 2* ரன்களை அடித்துள்ளனர்.

அதனால் 6 விக்கெட்டை வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். இனிவரும் போட்டிகளில் குறைந்தது இரு போட்டிகளில் வென்றால் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியால் ப்ளே -ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும்.

போட்டி முடிந்த பிறகு பேசிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் டூப்ளஸிஸ் : ” எனக்கு தெரிந்து 20 ரன்கள் நாங்கள் (பெங்களூர்) குறைவாக முடித்துவிட்டோம். மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது பேட்டிங் செய்வதில் மிகவும் வலிமையான அணி தான். ஒரு வருத்தம் மட்டும் தான், இறுதி 5 ஓவரில் நாங்கள் நினைத்தபடி ரன்களை அடிக்க முடியாமல் போனது.”

“இருப்பினும் 200 ரன்கள் என்பது நல்லது தான். அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரான சூரியகுமார் யாதவ் ஒரு திறமையான வீரர். சூரியகுமார் யாதவ் மட்டும் பேட்டிங் செய்ய தொடங்கிவிட்டால் நிறுத்தவே முடியாது. எங்கள் அணியின் வீரரான சிராஜ் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார் என்று கூறியுள்ளார் டூப்ளஸிஸ்.