ரிக்கி பாண்டிங் போலவே இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி விளையாட வேண்டும் ; முன்னாள் வீரர் உறுதி ;

0

ஐபிஎல் 2022 : இதுவரை 65 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இன்னும் சில நாட்களில் ப்ளே – ஆஃப் சுற்றுகள் நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த முறை யார் கோப்பையை வெல்ல போகிறார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த ஐபிஎல் 2021 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் பல குழப்பங்கள் ஏற்பட்டது. ஏனென்றால் முதலில் விளையாடிய போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை வழிநடத்தினார் வார்னர். ஆனால் மோசமான நிலையில் இருந்த காரணத்தால் கேப்டன் பதவியில் இருந்து மட்டுமன்றி அணியில் இருந்தும் வெளியேறினார் வார்னர்.

பின்பு அவருக்கு (வார்னர்) பதிலாக கேன் வில்லியம்சன் கேப்டனாக பதவியேற்றுள்ளார். பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சன்ரைசர்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார் கேன் வில்லியம்சன். ஐபிஎல் 2022 தொடக்கத்தில் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் இருந்தது சன்ரைசர்ஸ் அணி.

ஆனால் இப்பொழுது 8வது இடத்தில் உள்ளது சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி. இதுவரை 13 போட்டிகளில் 6 போட்டிகளில் வென்றுள்ளது. இருப்பினும் கேப்டன் கென் வில்லியம்சன் சரியாக விளையாடவில்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் இதுவரை 13 போட்டிகளில் 216 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் சன்ரைசர்ஸ் கேப்டன்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறுகையில் ; “2013ஆம் ஆண்டு நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய போது ரிக்கி பாண்டிங் தான். இருப்பினும் கேப்டனாக வழிநடத்திய போது அவரால் சரியாக ரன்களை அடிக்க முடியவில்லை.”

“அதனை அவர் புரிந்து கொண்டு 6 போட்டிகளுக்கு பிறகு அணியில் இருந்து சில போட்டிகள் விலகினார். பின்பு ரோஹித் சர்மா அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தது. அதனால் கேப்டனாக இருக்கும் கேன் வில்லியம்சன் கேப்டன் பதவியை மற்ற வீரர்களிடம் ஒப்படைத்துவிட்டு பேட்டிங் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.”

சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்கு இன்னும் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு அதிமாக உள்ளது. ஆனால் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் வரும் போட்டிகளில் தோல்விகளை பெற்று சன்ரைசர்ஸ் அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் ப்ளே – ஆஃப் வாய்ப்பு கிடைக்கும்.

இருந்தாலும் சந்தேகம் தான். சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியின் மோசமான தோல்விக்கு என்ன காரணமாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பண்ணுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here