அடுத்த ஆண்டு சென்னை அணியின் முக்கியமான வீரராக இவர் இருப்பார் ; தோனி ஓபன் டாக் ;

0

நேற்று மும்பையில் உள்ள ப்ராபோர்னே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் சரியான ஆட்டம் அமையவில்லை. இருப்பினும் மொயின் அலி மட்டும் அதிரடியாக விளையாடினார். அதனால் இறுதி ஓவர் வரை போராடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 150 ரன்களை மட்டுமே அடித்தனர்.

தொடக்கத்தில் ஒரு ஒவருக்கு 12 ரன்கள் அடித்த சென்னை அணிக்கு இறுதி நேரம் ஆக ஆக சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை என்பது தான் உண்மை. அதில் ருதுராஜ் 2, டேவன் கான்வே 16, மொயின் அலி 93, ஜெகதீசன் 1, அம்பதி ராயுடு 3, தோனி 26, சண்டனர் 1 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. தொடக்க வீரரான ஜெய்ஸ்வால்- தவிர்த்து மற்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்பது தான் உண்மை. என்னேற்றல் ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், படிக்கல் போன்ற வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர்.

இருப்பினும் இறுதி வரை போராடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.4 ஓவர் முடிவில் 151 ரன்களை அடித்து சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அதில் ஜெய்ஸ்வால் 59, சஞ்சு சாம்சன் 15, ரவிச்சந்திரன் அஸ்வின் 40 ரன்களை அடித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி 14 போட்டிகளில் விளையாடி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதனால் 9வது இடத்தில் உள்ளது. போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அளித்த பேட்டியில் ;

” எனக்கு தெரிந்து 15 ரன்கள் குறைவாக இருந்தது போல தான் தெரிகிறது. ஆனால் இதில் இருந்து ஒரு விஷயம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விக்கெட்டை இழந்தாலும், அந்த நேரத்தில் மொயின் அலி பொறுப்பாக அணியை வழிநடத்தி கொண்டு சென்றார்.”

“ஒரு போட்டி தொடக்கத்தில் சரியாக ஆரம்பிக்கவில்லை என்றால், 180 ரன்கள் அடித்தாலும் போதாது. எனக்கு தெரிந்து அடுத்த ஆண்டு நிச்சியமாக புதிய வீரர்கள் தொடக்கத்தில் இருந்து ஆர்மபிக்க மாட்டார்கள். அதிலும் எங்கள் மலிங்க (பாத்திரனா) இந்த ஆண்டு அவரையே அணியில் தேர்வு செய்ய தவறிவிட்டோம்.

ஆனால் நிச்சியமாக அடுத்த ஆண்டு அவரை அணியின் ப்ளேயிங் 11ல் இடம்பெற வைக்க போகிறோம். தனி நபராக இல்லாவிட்டாலும், ஒரு அணியாக விளையாடுவது தான் மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு பேட்ஸ்மேன் அல்லது பவுலர் யாராக இருந்தாலும், சரியாக அவர்களது வாய்ப்பை பயன்படுத்த வேண்டியது அவசியம்.

ஒரு ஒரு வருடம் மட்டும் நடக்க போகும் போட்டி அல்ல, அடுத்த ஆண்டுகளையும் நீங்கள் நினைத்து தான் விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார் மகேந்திர சிங் தோனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here