தோனி இல்லை ; எனக்கு இவர் தான் எப்பொழுதும் முன்மாதிரியான வீரர் ; CSK அதிரடி வீரர் ஷிவம் துபே ஓபன் டாக் ;

0

ஒருவழியாக சென்னை அணி நேற்று நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வென்றுள்ளது சென்னை. அதுமட்டுமின்றி இந்த முறை ஐபிஎல் 2022 தனது முதல் போட்டியில் வெற்றியை கைப்பற்றியுள்ளது.

நேற்று 22வது போட்டியில் போட்டியில் களமிறங்கியது டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

20 ஓவர் முடிவில் 216 ரன்களை அடித்த சென்னை அணி. பின்பு 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணி. தொடக்க ஆட்டம் சரியாக அமையாத காரணத்தால் முதல் ஐந்து விக்கெட்டை தொடர்ந்து இழந்தது பெங்களூர் அணி.

இறுதி வரை போராடிய பெங்களூர் அணி 193 ரன்களை அடித்த நிலையில் தோல்வியை கைப்பற்றியது பெங்களூர் அணி. அதுமட்டுமின்றி ஐபிஎல் 2022யில் இதுவரை விளையாடிய சென்னை தனது முதல் வெற்றியை கைப்பற்றியுள்ளது. இருப்பினும் இப்பொழுது சென்னை அணி புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

சென்னை அணிக்கு தொடக்க ஆட்டத்தை விட மிடில் ஆர்டர் மிகவும் வலுவாக உள்ளது தான் உண்மை. அதிலும் இந்த ஆண்டு ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் 4 கோடி விலை கொடுத்து கைப்பற்றியுள்ளது சென்னை அணி. நேற்று நடந்த போட்டியில் ஷிவம் துபே-வின் பங்களிப்பு சென்னை அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியது.

போட்டி முடிந்த பிறகு ஷிவம் துபே பேசியதில் ; ” எங்கள் அணியின் முதல் வெற்றியை தான் நாங்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு வந்தேன். இப்பொழுது நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். அதுமட்டுமின்றி, என்னுடைய பங்களிப்பு இன்றைய போட்டியில் முக்கியமான ஒன்றாக இருப்பதால், எனக்கு பெருமையாக உள்ளது.”

“எனக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், நான் எப்பொழுது அணியில் உள்ள அனுபவம் வாய்ந்த வீரர்களிடம் பேசுவது வழக்கம் தான். அதிலும் குறிப்பாக நான் தோனியிடம் அதிகமாக பேசுவேன். அவர் தான் உன்னுடைய வேலையை சரியாக கவனித்து கொள்ள, கவனமாக இருந்துகொள் என்று சொல்லுவார்.”

“அதுமட்டுமின்றி, நான் இடது கை பேட்ஸ்மேன், அதனால் மற்ற வீரர்களை விட என்னுடைய முன்மாதிரியான வீரர் என்றால் அது யுவராஜ் சிங் தான். பல ரசிகர்கள் நான் யுவராஜ் போல பேட்டிங் செய்து வருவதாக என்னிடம் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி, நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தயாராக தான் உள்ளேன் என்று கூறியுள்ளார் ஷிவம் துபே.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here