மும்பை அணியில் இது இல்லை ; அதனால் வெற்றி பெற வாய்ப்பே இல்லை ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

நேற்று நடந்த 23வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி நேற்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

அதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி வழக்கம்போல பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தினார்கள். அதுமட்டுமின்றி, அதிரடி மன்னனான லிவிங்ஸ்டன் எதிர்பாராத விதமாக 2 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

இருப்பினும் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 198 ரன்களை அடித்தனர். அதில் மயங்க் அகர்வால் 52, ஷிகர் தவான் 70, பரிஸ்டோவ் 12, லிவிங்ஸ்டன் 2, ஜிதேஷ் சர்மா 30, ஷாருக்கான் 15 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை.

வழக்கம்போல தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ப்ரேவிஸ் போன்ற வீரர்களால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சரமாரியாக ரன்களை குவிந்தன.

இருப்பினும் இறுதிவரை போராடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 186 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதில் ரோஹித் சர்மா 28, இஷான் கிஷான் 3, ப்ரேவிஸ் 49, திலக் வர்மா 36, சூர்யகுமார் யாதவ் 43, பொல்லார்ட் 10, உனட்கட் 12போன்ற ரன்களை அடித்துள்ளனர்.

அதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதுவரை விளையாடிய அனைத்து ஐந்து போட்டிகளிலும் மும்பை அணி தோல்வியை பெற்று புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது. போட்டி முடிந்த பிறகு பேசிய ரோஹித் சர்மா ;

“என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆமாம், தவறு எங்கு உள்ளது என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் இந்த முறை நாங்க நன்கு விளையாடியது போல தான் தெரிகிறது. முடிந்த வரை டார்கெட் கிட்ட வந்துவிட்டோம். ஒரு சில நேரத்தில் எங்களால் என்ன செய்ய முடியும் என்று கூட தெரியவில்லை.”

“ஆனால் 10வது ஓவருக்கு மேல் பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பாக பவுலிங் செய்தனர், புகழ் அவர்களுக்கு தான் சேரும். நாங்க பபுது விதமாக விளையாட வேண்டுமென்று நினைக்கின்றோம், ஆனால் அது எந்த விதத்திலும் சரிப்பட்டு வருவது போல எனக்கு தெரியவில்லை.”

“எங்கள் அணி வீரர்கள் சரியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது இல்லை. எப்பொழுது அணியின் இருக்கும் சூழ்நிலையை பொறுத்துதான் விளையாட வேண்டும். ஆனால் அது மட்டும் எங்கள் அணியில் நடைபெறுவது இல்லை.பிட்ச் பேட்டிங் செய்வதற்கு தவுந்த இடம் தான். நான் கூட 199 ரன்களை அடித்துவிடலாம் என்று தான் நினைத்தேன்.” என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விக்கு என்ன காரணமாக இருக்கும் ? இந்த முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா மும்பை ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!