இவர் வெறும் டி-20 வீரர் மட்டும் தானா ? இவருக்கும் ஒருநாள் போட்டிக்கும் சம்பந்தம் கிடையாதா ? உங்கள் கருத்து ?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் : டெஸ்ட்

ஜூலை 12ஆம் தேதி அன்று தொடங்கியது டெஸ்ட் போட்டிக்கான தொடர். முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மழை பெய்த காரணத்தால் போட்டி ட்ராவில் முடிந்தது. அதனால் 1 – 0 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்திய.

ஒருநாள் போட்டிக்கான தொடர்:

வெஸ்ட் இண்டிஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டை வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளனர்.

அதுமட்டுமின்றி, இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தது. இருப்பினும் சஞ்சு சாம்சன்,அக்சர் பட்டேல், ஹர்டிக் பாண்டிய போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டை பறிகொடுத்தனர்.

24.1 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த இந்திய கிரிக்கெட் அணி 113 ரன்களை அடித்துள்ளனர். மழை பெய்து வருவதால் போட்டியை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்னும் மழை பெய்து வருவதால் போட்டி நடைபெறுமா ? இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இவர் டி-20 போட்டிக்கான வீரர் மட்டும் தானா ?

கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆகி சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி வருகிறார் சூர்யகுமார் யாதவ். 32 வயதான சூரியகுமார் யாதவ் டி-20 போட்டிகளில் அதிரடி மன்னன் என்ற பெயரை பெற்றுள்ளார் என்பது தான் உண்மை.

இதுவரை 48 சர்வதேச டி-20 போட்டியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 1675 ரன்களை விளாசியுள்ளார். அதில் 3 சதம் மற்றும் 13 அரை சதம் அடங்கும். டி-20 போட்டியில் விளையாடுவது போல தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறாரா ? சூரியகுமார் யாதவ்.

நிச்சியமாக கிடையாது என்பது தான் உண்மை. இதுவரை 23 ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 433 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார் சூரியகுமார். இதில் இரு முறை மட்டுமே அரை சதம் அடித்துள்ளார். இருப்பினும் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுப்பது சரியான விஷயம் ஆ ? இல்லையா ? உங்கள் கருத்து என்ன ?