இதை மட்டும் கவனிக்காமல் இருந்தால் நிச்சியமாக உலகக்கோப்பை வெல்வது சிரமம் தான் ; முழு விவரம் உள்ளே ;

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டியில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளனர். நாளை இரவு 7மணியளவில் மூன்று ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. அதில் வெற்றியை கைப்பற்றும் அணி தான் தொடரையும் கைப்பற்ற முடியும்.

இரண்டாவது போட்டியின் விவரம் :

நேற்று இரவு 7 மணியளவில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதனால் வேறு வெளியின்றி பேட்டிங் செய்தது இந்திய. தொடக்க வீரரான இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

இருப்பினும், மிடில் ஆர்டரில் பேட்ஸ்மேன் சொதப்பிய காரணத்தால் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர். அதனால் 40.5 ஓவர் வரை விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட்டை இழந்து 181 ரன்களை அடித்தனர். அதில் இஷான் கிஷான் 55, சுப்மன் கில் 34, சஞ்சு சாம்சன் 9, சூர்யகுமார் யாதவ் 24, ரவீந்திர ஜடேஜா 10 ரன்களையும் அடித்துள்ளனர்.

பின்பு 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி. தொடக்க வீரர்கள் பெரிய அளவில் ரன்களை அடிக்காவிட்டாலும் கேப்டன் மற்றும் கார்ட்டி ஆகிய இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை அடித்தனர். அதனால் 36.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 182 ரன்களை அடித்து இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

இதில் மாயேர்ஸ் 36, ஷாய் 63, கார்ட்டி 48 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். அதனால் ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று நடைபெற உள்ள போட்டியில் வாழ்வா சாவா என்று இரு அணிகளும் மோத உள்ளனர்.

உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெல்ல வாய்ப்பு இருக்கிறதா ?

நாளுக்கு நாள் இந்திய அணியின் பங்களிப்பு மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறது தான் உண்மை. இரண்டாவது போட்டியில் விராட்கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் இல்லை தான். இருப்பினும் முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 115 ரன்களை அடிக்க திணறியது இந்திய கிரிக்கெட் அணி.

ஆமாம், அதுவும் 22.5 ஓவர் வரை விளையாடிய இந்திய 5 விக்கெட்டை இழந்து 118 ரன்களை அடித்தனர். மிகவும் மோசமான நிலையில் இந்திய கிரிக்கெட் அணி இன்னும் அதிரடியாக விளையாடுவது மிகவும் முக்கியமான ஒன்று. அதுமட்டுமன்றி, சரியான வீரர்களை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் அணி தவறை மேற்கொண்டு வருகிறதா ?

ஸ்விங் கிங் என்று அழைக்கப்படும் புவனேஸ்வர் குமாருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுப்பதே இல்லை. அதுமட்டுமின்றி, இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் இடம்பெற்றும் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கொடுக்காதது ஏன் ? என்று பல கேள்விகள் எழுந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. அதுவும் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இந்த ஆண்டு உலகக்கோப்பையை வெல்லுமா ? இந்திய அணி.

உங்களுடைய கருத்தை மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!