இப்படி பண்ண யாராலும் போட்டியில் ஜெயிக்கவே முடியாது ; கடுப்பாக பேசிய கே.எல்.ராகுல்

நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களான விராட்கோலி 25 ரன்களை அடித்த நிலையில், டூப்ளஸிஸ் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தார். இருப்பினும் ரஜத் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடிய காரணத்தால் பெங்களூர் அணிக்கு ரன்களை குவிந்தது.

அந்த நேரத்தில் லக்னோ அணி பவுலர்களால் ரன்களை கட்டுப்படுத்தவில்லை. தொடர்ந்து பவுண்டரிகளை விளாசியது பெங்களூர் அணி. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 207 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக ரஜத் 112, தினேஷ் கார்த்திக் 37,விராட்கோலி 25 ரன்களை அடித்தனர்.

பின்பு 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. தொடக்க வீரரான டி-காக் 6 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆனால் கே.எல்.ராகுல் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரும் சிறப்பான பார்ட்னெர்ஷிப் செய்து விளையாடினார்கள்.

ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இருவரது விக்கெட்டை இழந்த நிலையில் இறுதி வரை போராடிய லக்னோ அணியால் 193 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வென்றுள்ளது. போட்டி முடிந்த பிறகு பேசிய லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில் ;

“உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் எதுவும் செய்யவில்லை. அதனால் தான் தோல்வியே. அதுவும் குறிப்பாக பீல்டிங் செய்யும்போது மிகவும் மோசமான நிலைக்கு சென்றோம். அதுமட்டுமின்றி, சுலபமாக பிடிக்க வேண்டிய கேட்ச் கூட நிச்சயமாக தோல்விக்கு முக்கியமான காரணமாக தான் உள்ளது.”

“அதுமட்டுமின்றி, ரஜத் சிறப்பாக சதம் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி அணியில் இருக்கும் டாப் ஆர்டரில் ஏதாவது ஒரு வீரர் சதம் அடித்தால் நிச்சியமாக போட்டியில் வெற்றி பெற முடியும். அவங்க பீல்டிங் சிறப்பாக செய்தனர். நாங்கள் மோசமான செய்தோம். இதனை பாசிட்டிவ் ஆக தான் எடுத்துக்கொள்ள போகிறோம்.”

“இது புதிய அணி அதனால் அனைத்து வீரர்களும் கற்றுக்கொண்டு வருகின்றனர் என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல். லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் தோல்விக்கு என்ன காரணமாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!