இவர் இந்த அளவுக்கு பேட்டிங் செய்வார் என்று சத்தியமாக நான் எதிர்பார்க்கவே இல்லை ; விராட்கோலி ஓபன் டாக் ;

0

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டுமென்றால் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் போதும் என்ற அளவிற்கு இப்பொழுது நிலைமை உருவாகியுள்ளது. உலகத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை விட இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு என்றும் எதிர்பார்ப்பு அதிகம் தான்.

அதிலும் ஒரு சில வீரர்கள் குறைவான போட்டிகளில் இந்திய அணியில் தேர்வாகிவிடுவார்கள். ஆனால் ஒரு சிலர் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே நீண்ட நாட்கள் விளையாடி வருவார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்கிடைக்காது. இதனை பற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலி கூறுகையில் ;

எனக்கு தெரிந்து கே.எல்.ராகுல் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகிய இருவரும் கிரிக்கெட் போட்டிகளில் அதிக மற்றும் விரைவான முன்னேற்றத்தை பெற்றுள்ளனர். கே.எல்.ராகுல் 2013ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தான் விளையாடி வந்தார்.

அப்பொழுதே தெரியும் நிச்சயமாக டி-20 போட்டிக்கான வீரராக கே.எல்.ராகுல் இடம்பெற போகிறார் என்று. கே.எல்.ராகுல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு பிறகு அவரை நான் பார்க்கவில்லை. அதன்பின்னர் அவர் ரஞ்சி கோப்பை மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட போவதாக தகவல் வந்தது.

எனக்கு நன்கு நியாபகம் உள்ளது கே.எல்.ராகுல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருக்கும் அவர் சின்ன பையன். அந்த நேரத்தில் நான் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வந்தேன். பின்னர் நாங்கள் இருவரும் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணியில் விளையாடி வந்தோம்.

அதனால் எங்கள் இருவருக்கும் சரியாக உட்கார்ந்து பேசுவதற்கு கூட நேரம் இல்லை. கடந்த 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். அப்பொழுது அவரது ஆட்டத்தை பார்த்து வாயடைத்து போனேன்.

அதுமட்டுமின்றி கே.எல்.ராகுல் அந்த நிலைமைக்கு வர அதிகமாக வேலை செய்துள்ளார். அவரது நம்பிக்கையை நான் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார் விராட்கோலி.

மேலும் ஐபிஎல் போட்டிகளை பற்றிய பேசிய விராட்கோலி ; 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் விளையாடி வந்தார் கே.எல். ராகுல். ஆனால் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை. அப்பொழுது தான் எனக்கு தெரிந்தது அவர் அழுத்தத்தில் இருக்கிறார் என்று.

எனக்கு தெரியும் கே.எல்.ராகுல் மிகவும் திறமையான வீரர் என்று. வாய்ப்பு கொடுத்தால் அதனை மறக்க முடியாத படி விளையாடுவார் என்று. பின்னர் 2016ஆம் அவரை மீண்டும் பெங்களூர் அணி கைப்பற்றியது. அதில் டிவில்லியர்ஸ், கெயில் , நான் போன்ற வீரர்கள் விளையாடி வந்தோம். எங்களுடன் அவர் (கே.எல்.ராகுல்) விளையாடும்போது நிச்சியமாக அவருக்கு மிகப்பெரிய அளவில் நம்பிக்கை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார் விராட்கோலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here