சிங்கம் களம் இறங்கிடுச்சு ..! இந்திய அணிக்கு மீண்டும் திரும்பிய ஆல் – ரவுண்டர் ; இனிமேல் தான் உண்மையான போட்டியே இருக்கிறது ;

0

இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கான அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுமா இந்திய என்று கேள்விக்கு சந்தேகம் தான் பந்தில். ஏனென்றால் மூன்று போட்டிகளில் இரு போட்டியில் வென்று புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்திய. இருந்தாலும் முதல் இரு இடங்களில் இடம்பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

சமீபத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி பெற்றது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. அதனால் இனிவரும் இரு போட்டிகளிலும் இந்திய அணி வென்றால் மட்டுமே முதல் இரு இடங்களில் ஏதாவது இடத்தை கைப்பற்ற முடியும்.

உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி சந்தித்த பிரச்சனைகள் :

இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் எப்படியாவது இந்திய கிரிக்கெட் அணி பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அதிலும் குறிப்பாக ஆசிய கோப்பையை ஒரு பயிற்சி ஆட்டமாக மாற்றி ப்ளேயிங் 11 வீரர்களை முடிவு செய்தனர். ஆனால் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு பல அதிர்ச்சி தகவலை பிசிசிஐ வெளியிட்டனர்.

அதில் பும்ரா மற்றும் ஆல் – ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்களும் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறினார்கள். அதனால் பும்ராவிற்கு பதிலாக ஷமியும், ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக அக்சர் பட்டேலும் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வருகின்றனர்.

என்னதான் பும்ரா இல்லாவிட்டாலும், ரவீந்திர ஜடேஜாவின் பங்களிப்பு இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று தான். சரியாக ஐசிசி உலகக்கோப்பை போட்டி தொடங்கும் முன்பு அவருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ரவீந்திர ஜடேஜா இப்பொழுது குணமாகிக்கொண்டு வருகிறார்.

அதுமட்டுமின்றி, வருகின்ற டிசம்பர் மாதம் பங்களாதேஷ் அணிக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்கான அணியை நேற்று தான் பிசிசிஐ வெளியிட்டது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளனர். இதில் ரவீந்திர ஜடேஜா நிச்சியமாக பங்கேற்க போவதாக பிசிசிஐ உறுதியாக கூறியுள்ளனர்.

அதனால் இனிவரும் போட்டிகளில் ஆல் – ரவுண்டர் பிரச்சனை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரவீந்திர ஜடேஜாவின் பங்களிப்பு இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்ற ? ஒருவேளை ரவீந்திர ஜடேஜா இல்லாத நேரத்தில் யார் மாற்று வீரராக இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here