இப்படி சிறப்பாக பவுலிங் செய்யும் இவர் டி-20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடிருக்க வேண்டும் ; முன்னாள் வீரர் பேட்டி ;

பங்களாதேஷ் : கடந்த டிசம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 26ஆம் தேதி வரை இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

ஒருநாள் போட்டிக்கான தொடர் :

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், லிட்டன் தாஸ் தலைமையிலான பங்களாதேஷ் அணியும் மோதின. விளையாடிய மூன்று ஒருநாள் போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரையும் வென்றுள்ளனர். பின்பு ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் டெஸ்ட் போட்டிக்கான தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியின் விவரம் :

டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி 133.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 404 ரன்களை அடித்தனர். பின்னர் பேட்டிங் செய்ய களமிறங்கிய பங்களாதேஷ் அணியை மிரளவைத்துள்ளார் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர். குல்தீப் யாதவின் சிறப்பான பந்து வீச்சால் பங்களாதேஷ் அணியின் விக்கெட் தொடர்ந்து இழந்தனர்.

டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் ஓபன் டாக. மேலும் இதனை பற்றி பேசிய அவர் ” இந்திய கிரிக்கெட் அணியில் குல்தீப் யாதவ் சிறப்பாக பவுலிங் செய்தது ஆச்சரியமாக உள்ளது. நான் முன்பே சொன்னேன், குல்தீப் யாதவ் அணியில் இடம்பெற்றிருக்க வேண்டுமென்று. ஆனால் அவர் விளையாடாதது அதிர்ச்சியாக தான் இருந்தது.”

“அவர் (குல்தீப் யாதவ்) ஐபிஎல் போன்ற போட்டிகளில் விளையாடிய விதம் சிறப்பாக இருந்த காரணத்தால் உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் இடம்பெறுவார் என்று நினைத்தேன். ஆனால் இடம்பெறவில்லை. நிச்சியமாக அடுத்த வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடுவார். இந்தியாவின் பந்துவீச்சு தாக்குதலில் பல்வேறு வகைகளை குல்தீப் யாதவால் கொண்டு வர முடியும். ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம்பெறுவதற்கு முன்பு வரை வாய்ப்பு கிடைக்கவில்லை.”

ஆனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம்பெற்ற நம்பிக்கையுடன் சிறப்பாக விளையாடி வருகிறார் குல்தீப் யாதவ், என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர்.”