வீடியோ : பா…! என்ன அடி ..! இந்திய அணியின் பவுலர் அடித்த சிக்ஸரால் வாயடைத்து போன பங்களாதேஷ் பவுலர்கள் ;

0

பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று காலை 9:30 மணியளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

இந்திய அணிக்கும் தொடக்க ஆட்டத்திற்கு ராசியே இல்லைய ? ஏனென்றால் சமீப காலமாகவே இந்திய அணியின் ஆபத்தாக இருக்கும் ஒரே விஷயம் தொடக்க ஆட்டம் மட்டுமே. ஏனென்றால், கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சிறப்பான தொடக்க ஆட்டத்தை விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால், கே.எல்.ராகுல் 22 மற்றும் சுப்மன் கில் 20 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தனர். ஆனால் புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அணியை ஆபத்தான நிலையில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

ஆமாம் அவர்களது பார்ட்னெர்ஷிப் இந்திய அணிக்கு புதிய பலத்தை கொடுத்துள்ளது தான் உண்மை. முதல் நாள் முடிவில் 90 ஓவர் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 278 ரன்களை அடித்த நிலையில் 6 விக்கெட்டை இழந்துள்ளனர். அதில் புஜாரா 90, ஸ்ரேயாஸ் 82*, ரிஷாப் பண்ட் 46, கே.எல்.ராகுல் 22, சுப்மன் கில் 20 ரன்களை அடித்துள்ளனர்.

பின்னர், முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்த பங்களாதேஷ் அணி 55.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 150 ரன்களை மட்டுமே அடித்தனர். பின்னர் இப்பொழுது மீண்டும் இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது இன்னிங்ஸ் -ல் விளையாடி வருகின்றனர்.

உமேஷ் யாதவ் அடித்த அதிரடியான சிக்ஸர் :

முதல் இன்னிங்ஸ் விளையாடி கொண்டு இருந்த இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக பேட்டிங் செய்தனர். சரியாக 131.4 ஓவரில் மெஹிடி வீசிய பந்தை எதிர்கொண்டார் உமேஷ் யாதவ். அதனை சரியாக பயன்படுத்தி சிக்ஸர் அடித்துள்ளார். அதனால், பங்களாதேஷ் பவுலர்கள் வாயடைத்து போனார்கள். அதன் வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.

உமேஷ் யாதவ் விளையாடிய அளவிற்கு கூட கே.எல்.ராகுல் தொடக்க வீரர் சரியாக விளையாடவில்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி கே.எல்.ராகுல் 54 பந்தில் 22 ரன்களை அடித்துள்ளார், ஆனால்உமேஷ் யாதவ் 10 பந்தில் 15 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here