இவர் கேப்டனாக இருப்பதில் ஒரு பயனும் இல்லை ; அதற்கு பதிலாக ஷிகர் தவான் விளையாடி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்;

பங்களாதேஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர்.

முதல் இன்னிங்ஸ் விவரம் :

டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி 133.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 404 ரன்களை அடித்தனர்.

அதில் கே.எல்.ராகுல் 22, சுப்மன் கில் 20, புஜாரா 90, ஸ்ரேயாஸ் ஐயர் 86, விராட்கோலி 1, ரிஷாப் பண்ட் 46, அக்சர் பட்டேல் 14, ரவிச்சந்திரன் அஸ்வின் 58, குல்தீப் யாதவ் 40, உமேஷ் யாதவ் 15 ரன்களை அடித்தனர். பின்னர் 405 ரன்களை அடிக்க வேண்டிய நிலையில் களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு பின்னடைவு தான் மிஞ்சியது.

ஏனென்றால், வெறும் 55.5 ஓவர் விளையாடிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டை இழந்த நிலையில் 150 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதனால் 254 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 24, ரஹீம் 28, மெஹிடி 25 ரன்களை அடித்துள்ளனர்.

இரண்டாவது இன்னிங்ஸ் :

இன்று காலை முதல் தொடங்கிய இரண்டாவது இன்னிங்ஸ்-ல் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 36 ஓவர் முடிவில் 132 ரன்களை அடித்த நிலையில் 1 விக்கெட்டை இழந்துள்ளது இந்திய. அதில் கே.எல்.ராகுல் 23, புஜாரா 28*, சுப்மன் கில் 77* ரன்களை அடித்துள்ளனர்.

தொடர்ந்து மோசமான நிலையில் விளையாடி கொண்டு இருக்கும் இந்திய அணியின் தொடக்க வீரர் :

இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வரும் கே.எல்.ராகுல் கடந்த சில போட்டிகளாகவே சிறப்பாக விளையாடுவது இல்லை. அதிலும் குறிப்பாக சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை மற்றும் டி -20 உலகக்கோப்பை போட்டிகளிலும் மோசமான நிலையில் விளையாடி வந்துள்ளார்.

அதனால் அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று கருத்துக்கள் எழுந்து வருகின்றனர். ஆனால் ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டனாக விளையாடி வருகிறார் கே.எல்.ராகுல். ஆனால் தொடக்க வீரராக சிறப்பாக விளையாடினாரா ?

கிடையாது. முதல் இன்னிங்ஸ்-ல் 22 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸ்-ல் 23 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்துள்ளார் கே.எல்.ராகுல். அதனால் கே.எல்.ராகுலை காட்டிலும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் ஷிகர் தவான், மயங்க் அகர்வால் போன்ற வீரர்கள் சிறப்பாக தான் விளையாடி வருகின்றனர். ஆனால் ஏன் பிசிசிஐ இதனை பற்றி யோசிப்பதே இல்லை என்று ரசிகர்கள் ஆவேசமாக அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.