தோனியிடம் இருந்து இவர் கற்றுக்கொள்ள முக்கியமான விஷயம் இதுதான் ; முன்னாள் வீரர் ஓபன் டாக் ;

நேற்று இரவு நடைபெற்ற 18வது போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கியது பஞ்சாப் அணி.

எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமையவில்லை இருப்பினும் அனைத்து வீரர்களும் ரன்களை அடித்த காரணத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 153 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக மாத்தியூ ஷார்ட் 36, ராஜபக்ச 20, ஜிடேஷ் சர்மா 25, சாம் கரன் 22 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தது. இருப்பினும் தொடக்க வீரரான சுப்மன் கில் நிதானமாக ரன்களை அடித்தார். அதனால் போட்டி இறுதி ஓவர் வரை சென்றது. சரியாக 19.5 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 154 ரன்களை அடித்தது குஜராத் அணி.

இதில் சுப்மண் கில் 67, சஹா 30, சாய் சுதர்சன் 19, டேவிட் மில்லர் 17, ராகுல் திவேதிய 5* ரன்களை அடித்துள்ளனர். அதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்று புள்ளிபட்டியலில் 3வது இடத்தில் உள்ளனர். இந்த போட்டியில் சுப்மண் கில் அதிக ரன்களை அடித்தாலும் அதிரடியான ஆட்டம் இல்லாத காரணத்தால் இறுதி ஓவர் வரை சென்றது குஜராத் அணி.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில் : “அவர் சின்ன பையன் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். நிச்சியமாக இந்த திறமையை வைத்து பெரிய அளவில் சாதனை செய்வார். இருப்பினும் தோனி மற்றும் விராட்கோலி-க்கு டெத் ஓவர்களில் அதிகமாக விளையாடிய அனுபவம் இருக்கும்.”

“அதிலும் தோனி டெத் ஓவரில் மட்டுமே அதிகப்படியான கிரிக்கெட் வாழ்கை இருந்தது. ஆனால் சுப்மன் கில் -க்கு இது புதிதான விஷயம். நிச்சியமாக வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என்று கூறியுள்ளார் சஞ்சய்.”