ஹர்ஷல் பட்டேல் -க்கு பதிலாக இவர் தான் இடம்பெற்றிக்க வேண்டும் ; முன்னாள் வீரர் பேட்டி ; இவர் என்ன இப்படி சொல்றாரு ?

0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை 2022 வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் தான் நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

indian Team 2

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகளில் முதல் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், சூப்பர் 4 லீக் சுற்றில் மோசமான நிலையில் தோல்விகளை பெற்ற இந்திய கிரிக்கெட் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

என்னதான் சீரியஸ் தொடரில் மற்ற அணிகளை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்றாலும், ஐசிசி போன்ற முக்கியமான போட்டிகளில் இந்திய அணியின் பங்களிப்பு மிகவும் குறைவான நிலையில் இருப்பது தான் உண்மை. ஆசிய கோப்பையை நிச்சியமாக இந்திய வென்றுவிடும் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் பேட்டிங் மிகவும் வலிமையாக இருந்தாலும் பவுலிங் மோசமான நிலையில் இருந்தது தான் உண்மை. ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தான் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரில் தோல்வியை பெற்றோம்.

அதனால் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் பிசிசிஐ வெளியிட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியானது. அதில் ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடிய பலர் வீரர்களுக்கு டி-20 உலகக்கோப்பை போட்டியிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டடுள்ளது.

டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் :

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டிய, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதில் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேலை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் ஆசிய கோப்பை டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதுமட்டுமின்றி காத்திருப்பு பட்டியலில் முகமத் ஷமி, தீபக் சஹார், ரவி பிஷானி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ளனர்…!

ஹர்ஷல் பட்டேலும் பதிலாக இவர் இடம்பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். அதனை பற்றி பேசிய அவர் : “எனக்கு தெரிந்து ப்ளேயிங் 11ல் ஹர்ஷல் பட்டேலுக்கு பதிலாக முகமத் ஷமி அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.”

“அங்கு பென்ஸ் அதிமாக இருக்கும். அதனால் முகமத் ஷமி பங்களிப்பு அதிகமாவே இருக்கும். அதுமட்டுமின்றி முதல் மூன்று ஓவரில் நிச்சியமாக 2 அல்லது 3 விக்கெட்டை கைப்பற்றிவிடுவார். இதனை பற்றி ஏன் யாரும் யோசிக்கவில்லை. ஐபிஎல் போட்டிகளில் அவர் செய்த சாதனையை பாருங்கள். போட்டியின் தொடக்கத்திலேயே முக்கியமான விக்கெட்டை கைப்பற்றினால் சிறப்பான விஷயம் தான..!” என்று கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.

முகமத் ஷமி கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி கொண்டு வருகிறார். ஆனால் இதுவரை அதிகப்படியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இதுவரை மொத்தமாக சர்வதேச டி-20 போட்டிகள் வெறும் 17 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார் ஷமி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here