ரோஹித் சர்மாவுடன் இவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினால் அதிரடியாக இருக்கும் ; முன்னாள் வீரர் உறுதி ;

0

சமீபத்தில் தான் ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இலங்கை அணி தான் சாம்பியன் படத்தை கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் சூப்பர் 4 லீக் சுற்றில் இருந்து வெளியேறியது.

என்னதான் மற்ற நாடுகளுக்கு இடையேயான சீரியஸ் தொடரில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றாலும் ஐசிசி, ஆசிய போன்ற முக்கியமான போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே கைப்பற்றி வருகிறது இந்திய. ஏனென்றால் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை போட்டிகளிலும் இந்திய அணி மோசமான நிலையில் வெளியேறியது.

அதேபோல தான் ஆசிய கோப்பையிலும், இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு ஐசிசி டி-20 உலகக்கோப்பை 2022 போட்டிகள் நடைபெற உள்ளது. அதுவும் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளதால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது. சமீபத்தில் தான் 15 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ.

அதில் ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), சூரியகுமார் யாதவ், விராட்கோலி, புவனேஸ்வர் குமார், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், ஹர்டிக் பாண்டிய, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், பும்ரா, ஹர்ஷல் பட்டேல் மற்றும் அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி, முகமத் ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷானி மற்றும் தீபக் சஹார் போன்ற நான்கு வீரர்கள் காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆசிய கோப்பையை தவறவிட்ட இந்திய அணி எப்படி ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட போகிறது ?

இந்திய அணியில் இருக்கும் சிக்கல் ;:

கடந்த 15 சர்வதேச டி-20 போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரராக பலர் மாறி மாறி விளையாடி கொண்டு வருகின்றனர். ஆமாம், அதில் ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன்,ரிஷாப் பண்ட் போன்ற வீரர்கள் ரோஹித் சர்மாவுடன் பார்ட்னெர்ஷிப் செய்து விளையாடி வருகின்றனர்.

ஆனால் காயத்திற்கு பிறகு விளையாடிய கே.எல்.ராகுல் தான் ஆசிய கோப்பை முழுவதும் தொடக்க வீரராக விளையாடியுள்ளார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்துள்ளார் என்பது தான் உண்மை. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ரோஹன் கவாஸ்கர் சில முக்கியமான கருத்தை கூறியுள்ளார்.

அதில் ” விராட்கோலி இப்பொழுது சிறப்பாக டி-20 போட்டிகளில் விளையாட தொடங்கிவிட்டார். அவருடைய சாதனைக்கு பக்கத்தில் ஒருவரும் நெருங்க முடியாது. சாதாரணமாக 55 -57 ரன்களை அடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, 160 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 122 ரன்களை விளாசியுள்ளார். அதனால் ரோஹித் சர்மா மற்றும் விராட்கோலி ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் ரோஹன் கவாஸ்கர்.”

விராட்கோலி கடந்த இரு ஆண்டுகளாக பெரியளவில் ரன்களை அடிக்காமல் சொதப்பலாக விளையாடி வந்துள்ளார். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட்கோலி 5 போட்டியில் 276 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் தொடக்க வீரராக யார் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் களமிறங்க வேண்டும் ? ரோஹித் ஷர்மாவுடன் விராட்கோலி பார்ட்னெர்ஷிப் செய்தால் சிறப்பாக இருக்குமா ? இல்லையா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here