ஆசிய குப்பை டி-20 போட்டிகள் நடந்து முடிந்து நிலையில் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ள நிலையில் பல நாடுகள் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல தான் இந்திய அணியை நேற்று முன்தினம் தான் பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியிலும் ஆலோசனையிலும் உள்ளனர். அதுமட்டுமின்றி விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.
இந்திய அணியில் இருக்கும் தீராத பிரச்சனை :
இந்திய அணியிக்கு தொடக்க ஆட்டம் எப்பொழுதும் மோசமான நிலையில் தான் இருந்து வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி இறுதியாக விளையாடிய 15 சர்வதேச போட்டிகளில் சுமார் 9 வீரர்களுக்கு மேல் தொடக்க வீரராக விளையாடியுள்ளனர். அதில் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், சஞ்சு சாம்சன், ரிஷாப் பண்ட், தீபக் ஹூடா போன்ற வீரர்கள் தொடக்க வீரராக இந்திய அணியில் விளையாடியுள்ளனர்.
ஆனால், சரியான பார்ட்னெர்ஷிப் அமையாமல் திணறிக்கொண்டு வருகிறது இந்திய. அதிலும் ஆசிய கோப்பை 2022ல் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடினாலும் கே.எல்.ராகுல் பெரியளவில் பார்ட்னெர்ஷிப் செய்யவில்லை. அதனால் தொடக்க வீரர்கள் பெரிய அளவில் விளையாடுவாரா இல்லையா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பை போட்டியின் போது தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் சர்மாவை தொடக்க வீரராக அறிமுகம் செய்தது மகேந்திர சிங் தோனி தான். அதில் இருந்து ரோஹித் ஷர்மாவின் ஆட்டம் அதிரடியாகவும் சிறப்பாக அமைந்துள்ளது தான் உண்மை.
ஆனால் தோனி செய்தது தான் இதற்கு காரணம், ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்க வேண்டாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் கூறியுள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது. இதனை பற்றி அவரது சமூகவலைத்தளத்தில் பதிவு செய்தார் வாசிம் ஜாபர் ;
“டி-20 போட்டிகளில் ரிஷாப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்கினால் சிறப்பாக இருக்கும். ரோஹித் சர்மா 4வதாக பேட்டிங் செய்வது தான் சரியாக இருக்கும். கடந்த ஆண்டு 2013ஆம் அன்று ரோஹித் சர்மாவை தொடக்க வீரராக அறிமுகம் செய்தார் தோனி. அதன் பலனை நாம் பார்த்தோம். அதேபோல இப்பொழுது ரிஷாப் பண்ட் -ஐ ரோஹித் சர்மா தான் தொடக்க வீரராக வழிகாட்ட வேண்டும்.”
“அதனால் கே.எல்.ராகுல், ரிஷாப் பண்ட், விராட்கோலி, ரோஹித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் டாப் 5 ஆர்டரில் பேட்டிங் செய்ய வேண்டுமென்று கூறியுள்ளார் வாசிம் ஜாபர்.”
இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் சொன்னது சரிதானா ? ரோஹித் ஷர்மாவை 4வதாக பேட்டிங் செய்தால் இந்திய அணிக்கு நல்ல விஷயமாக இருக்குமா ? யார் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். உங்கள் ப்ளேயிங் 11ல் யார் யார் இடம்பெற வேண்டுமென்று நீங்க நினைக்கிறீர்கள் ?