அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இவருக்கு நிச்சியமாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் ; முன்னாள் வீரர் உறுதி ;

0

ஐபிஎல் டி-20 போட்டிகளை தொடர்ந்து இப்பொழுது தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஐந்து டி-20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி இரு போட்டிகளிலும், தென்னாபிரிக்கா அணி இரு போட்டிகளிலும் வென்றுள்ளனர். ஐந்தாவது போட்டி மழை காரணமாக ரத்து செய்தனர்.

அதனால் இந்த சீரியஸ் போட்டி சம நிலையில் முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து இந்திய அணி வருகின்ற ஜூன் 26ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிரான இரு டி-20 போட்டிகளில் விளையாட உள்ளனர். அதில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்டிக் பாண்டிய இடம்பெற்றுள்ளார்.

இதனை பற்றி பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கூறுகையில் ; ” கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்வது சரியில்லை. ராகுல் திவேதிய சிறப்பாக விளையாடி வருகிறார்.”

“எந்த சூழ்நிலையாக இருந்தாலும் பந்துகளை அடித்து தொம்சம் செய்துள்ளார் திவேதிய. என்னதான் அவ்வப்போது பிரபலமாக இருந்தாலும், இப்பொழுது காணாமல் போய்விட்டார். அவரை போன்ற ஒரு வீரர் இருக்கும்போது 15 வீரர்களுக்கு பதிலாக 16 வீரரை கூட விளையாடவைக்கலாம்.”

“ஒருவேளை வாய்ப்புகளை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினால் நிச்சியமாக அவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.” ராகுல் திவேதிய இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2022 போட்டிகளில் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வந்துள்ளார்.

அவரது (ராகுல் திவேதிய) -வின் அதிரடியான ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணி பல போட்டிகளில் வென்றுள்ளது தான் உண்மை. ஐபிஎல் 2022யில் 16 போட்டிகளில் விளையாடி 217 ரன்களை அடித்துள்ளார், அதில் அதிகபட்சமாக 43 ரன்களை அடித்துள்ளார்.

இந்திய அணியில் வாய்ப்பு இல்லாவிட்டாலும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கியமான அதிரடியான பினிஷர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க இந்திய கிரிக்கெட் அணியில் ராகுல் திவேதிய இடம்பெற வேண்டுமா ?? இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here