இதற்கு மேல் எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது ; என்னை எந்த போட்டியிலும் எடுக்க மாட்டார்கள் ; விக்கெட்டை கீப்பர் வருத்தம் ;

0

இந்திய கிரிக்கெட்:

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டுமென்றால் ரஞ்சி கோப்பை மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டிய சூழல் தான் இருந்தது. ஆனால் இப்பொழுது அப்படி இல்லை, ஐபிஎல் போட்டிகள் வந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் இணைவது மிகவும் எளிதாக மாறியுள்ளது.

ஆமாம், ஒரு வீரர் ஏதாவது ஒரு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் போதும் அவருக்கான இடம் நிச்சியமாக இந்தியா அணியில் கிடைக்கும். ஆனால் இந்திய அணியில் கிடைக்கும் வாய்ப்பை யார் தொடர்ந்து சரியாக பயன்படுத்துகிறார்களோ, அவர்களுக்கு தான் அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் கிடைக்கும்.

இந்திய கிரிக்கெட் இப்பொழுது அதிக அளவில் திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறது பிசிசிஐ. அதனால் அணியில் சரியாக விளையாட பல அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு சரியான வாய்ப்புகளை கொடுக்க வாய்ப்புகள் கிடைக்காமல் போகின்ற நிலை உருவாகியுள்ளது.

அதேபோல தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஹாவுக்கு அதே நிலைமை தான் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் 2022 போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடிய 11 போட்டிகளில் 311 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். பெரிய அளவில் விளையாட காரணத்தால் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இடம்பெறவில்லை.

வருகின்ற ஜூலை இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகள் விளையாட உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இதற்கு பேட்டி கொடுத்த சஹா ; “எனக்கு தெரிந்து நிச்சியமாக என்னை தேர்வாளர்கள் மற்றும் அணியின் நிர்வாகம் என்னை அணியில் கைப்பற்ற வாய்ப்புகள் கிடையாது”.

ஒருவேளை நான் ஐபிஎல் 2022 போட்டிகளில் விளையாடியது அவர்களுக்கு பிடித்திருந்தால் நிச்சியமாக என்னை இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் தேர்வு செய்வார்கள். மற்றவர்கள் என்ன யோசனை செய்கிறார்கள் என்பதை எனக்கு தெரியாது..! ஆனால் நான் நன்கு இருக்கும் வரை நிச்சியமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவேன் என்று கூறியுள்ளார் சஹா.”

தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய பிறகு முக்கியமான விக்கெட்டை கீப்பராக வலம் வந்தார். ஆனால் இந்திய அணியில் ரிஷாப் பண்ட் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்த காரணத்தால் சஹா-விற்கான வாய்ப்பு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது தான் உண்மை.

இந்திய கிரிக்கெட் அணியில் சஹா இடம்பெறுவது சிறப்பாக இருக்குமா ? இல்லையா? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here