கூடிய விரைவில் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து வெளியேற போகும் இந்திய வீரர் ; ரசிகர்கள் மகிழ்ச்சி ;

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரு டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வென்று 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

இரண்டாவது போட்டியின் சுருக்கம் :

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு சிறப்பான பேட்டிங் அமைந்தது. அதனால் 78.4 ஓவர் வரை விளையாடிய நிலையில் 263 ரன்களை அடித்தனர்.

பின்பு பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை. தொடர்ந்து ஐந்து விக்கெட்டை இழந்தாலும் ஆல் – ரவுண்டர் அக்சர் பட்டேல் அருமையாக விளையாடி ரன்களை குவித்தார். அதினால் 83.3 ஓவர் வரை விளையாடிய இந்திய அணி 262 ரன்களை அடித்தனர்.

பின்பு இரண்டாவது இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு எதிர்பார்த்த படி பேட்டிங் அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர். வெறும் 31.1 ஓவரில் 113 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி 26.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த இந்திய கிரிக்கெட் அணி 118 ரன்களை அடித்து ஆஸ்திரேலியா அணியை 6 விக்கெட்டை வித்தியாசத்தில் வென்றுள்ளனர்.

தொடர்ந்து மோசமான நிலையில் விளையாடி வரும் இந்திய அணியின் தொடக்க வீரர் :

இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் சமீப காலமாகவே பெரிய அளவில் ரன்களை அடிப்பதில்லை என்பது தான் உண்மை. தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்து கொண்டு வரும் கே.எல்.ராகுலுக்கு ஏன் வாய்ப்பு கொடுத்துக்கொண்டு வரீங்க ? என்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆமாம், திறமையான வீரர்கள் பலர் இந்திய அணியில் இருக்கும் நிலையில் ஏன் ? ராகுல் டிராவிட் இவருக்கு வாய்ப்பு கொடுக்கிறார் ? ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கே.எல்.ராகுல் 20, 17, 1 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, சமீபத்தில் இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்கி சதம் மற்றும் அதிகப்படியான ரன்களை எடுத்துள்ளார். ஆனால் சுப்மன் கில்-க்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ரசிகர்களே..! உங்களுக்கான கேள்வி :

இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் விளையாட வேண்டும ? அல்லது இளம் வீரரான சுப்மன் கில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும? உங்கள் கருத்துக்களை சரியான காரணத்துடன் பதிவு செய்யுங்கள்..!