யார் சாமி இவன் ; தொடக்க வீரராக விளையாட தகுதியே இல்லை ; இந்திய அணியில் இருந்து வெளியேற்றுங்கள் ;

1

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளது.

அதுமட்டுமின்றி, இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று காலை 9:30 மணியளவில் அருண் ஜெட்லீ மைதானத்தில் தொடங்கியுள்ளது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு சிறப்பாக தொடக்க அமையவில்லை என்றாலும் நிதானமாக விளையாடிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 78.4 ஓவர் முடிவில் 263 ரன்களை அடித்துள்ளனர்.

அடுத்ததாக இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸ் விளையாடி வருகிறது இந்திய. இதுவரை 68 ஓவர் முடிந்த நிலையில் 7 விக்கெட்டை இழந்த இந்திய கிரிக்கெட் அணி 201 ரன்களை அடித்துள்ளது.

இந்திய அணியில் தொடரும் பிரச்சனை :

இந்திய கிரிக்கெட் அணியில் நிரந்திரமான தொடக்க வீரர்கள் இருக்கிறார்களா என்று கேட்டால் ? இல்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி, தொடக்க வீரராக விளையாடி வரும் அனுபவம் வாய்ந்த வீரர்களும் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடுவது இல்லை.

அதில் ஒருவர் தான் கே.எல்.ராகுல் ஆமாம், சமீப காலமாகவே அவரது பங்களிப்பு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. அதவும் தொடக்க வீரராக பெரிய அளவில் ரன்களை அடிக்க முடியாமல் தவித்து வருகிறார் கே.எல்.ராகுல்.

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால், இந்த முடிவை வைத்ததுதான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் டாப் இடத்தை கைப்பற்ற முடியும்.

அப்படி இருக்கும் நிலையில் தொடக்க வீரராக கே.எல்.ராகுலின் பங்களிப்பு இந்திய அணிக்கு பின்னடைவை தான் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 20,17 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, கே.எல்.ராகுல் இறுதியாக விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 50, 8, 12, 10, 22, 23, 2, 10 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் ஏன் இளம் வீரரான சுப்மன் கில்-க்கு தொடக்க வீரருக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

சமீபத்தில் சுப்மன் கில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ள நிலையில் இவர் தான் ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் கே.எல்.ராகுலுக்கு ஏன் வாய்ப்பு கொடுத்து கொண்டு வரீங்க என்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here