கே.எல்.ராகுலுக்கு பதிலாக இந்த பையன் தொடக்க வீரராக விளையாடினால் தான், இந்திய அணியால் உலகக்கோப்பை வெல்ல முடியும் ; பிரெட் லீ ஓபன் டாக் ;

0

பங்களாதேஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிக்கான தொடர் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் ஒருநாள் போட்டிக்கான தொடரில் பங்களாதேஷ் அணியும், இரு டெஸ்ட் போட்டிக்கான தொடரில் இந்திய கிரிக்கெட் அணியும் வென்றுள்ளனர்.

இதனை அடுத்து ஜனவரி 3ஆம் தேதி முதல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. இதில் மூன்று ஒருநாள் போட்டிகளும், மூன்று டி-20 போட்டிக்கான தொடரும் நடைபெற உள்ளது. அதற்கான அணியை இன்னும் பிசிசிஐ அதிகார்வப்பூர்வமாக அறிவிக்க நிலையில், இளம் வீரர்களுக்கு அதிகப்படியான வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் தொடரும் வீக்னஸ் :

மற்ற நாடுகளுக்கு இடையேயான தொடர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கோப்பையை வென்று வரும் இந்திய கிரிக்கெட் அணியால், கடந்த பல ஆண்டுகளாகவே ஐசிசி கோப்பையை வேல முடியாமல் திணறிக்கொண்டு வருகிறது இந்திய. இறுதியாக தோனி கேப்டனாக இருந்த போது தான் ஐசிசி கோப்பையை வென்றுள்ளது இந்திய. அதனை அடுத்து அரையிறுதி சுற்றிலும், லீக் சுற்றில் இருந்து முன்னேற முடியாமல் தவித்து வருகிறது இந்திய.

அதுவும் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி-20 உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் மோசமான நிலையில் தோல்வியை பெற்றது இந்திய. அதனால் அடுத்த ஆண்டு 2023ல் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் வெல்ல வேண்டுமென்று இந்திய வீரர்கள் மற்றும் பிசிசிஐ தீவிரமான ஆலோசனையில் இருக்கின்றனர்.

இருந்தாலும் இந்திய அணியின் தொடக்க ஆட்டம் கடந்த பல போட்டிகளில் மோசமான நிலையில் தோல்வி பெற்றுள்ளது. அதற்கு முக்கியமான காரணம் தொடக்க வீரர்களின் மோசமான ஆட்டமும் தான். கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மாவின் பார்ட்னெர்ஷிப் ஆசிய கோப்பையிலும், உலகக்கோப்பை போட்டியிலும் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் ரோஹித் சர்மா அவ்வப்போது ரன்களை அடித்தாலும், கே.எல்.ராகுல் என்ன செய்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது ?

ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்தால் சரியாக இருக்காது. அதுமட்டுமின்றி, ரோஹித் சர்மாவுடன் தவான் அல்லது கே.எல்.ராகுலுக்கு பதிலாக இந்த இளம் வீரர் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான பிரெட் லீ. அதில் “எனக்கு தெரிந்து அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக இஷான் கிஷான் களமிறங்க வேண்டும். ஏனென்றால், அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் விரைவாக 200க்கு மேற்பட்ட ரன்களை விளாசியுள்ளார். அதில் இருந்தே தெரிகிறது, அவரால் தொடர்ச்சியாக விளையாட முடியும் என்று. இன்னும் சில மாதங்கள் இருக்கிறது. அதனால் அவருடைய பிட்னெஸ், பயிற்சிகள் சிறப்பாக இருந்தால் அவரை தேர்வு செய்யலாம். நிச்சியமாக இஷான் கிஷான் தான் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும்.”

“இனிவரும் போட்டிகளில் இஷான் கிஷனை ஆதரிக்க வேண்டும். நான் இஷான் கிஷான்-க்கு ஒரு அறிவுரை தான் சொல்ல ஆசைப்படுகிறேன். அது இரு சதம் அடிப்பது, சதம் அடிப்பதை தாண்டி பெரிய விஷயங்கள் இருக்கிறது. அதனால் தொடர்ச்சியாக அனைத்து போட்டிகளில் ரன்களை அடிக்க கற்றுக்கொண்டு விளையாட வேண்டுமென்று கூறியுள்ளார் பிரெட் லீ.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here