வீடியோ : யாரு சாமி நீ..! சூப்பர்மேன் மாதிரி பறந்து சிக்ஸர் பந்தை தட்டிவிட்ட அயர்லாந்து வீரர் ; ஆஸ்திரேலியா வீரர்கள் அதிர்ச்சி ;

0

ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் 1:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும், ஆண்ட்ரே பால்பிரின் தலைமையிலான அயர்லாந்து அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பவுலிங்கை செய்ய முடிவு செய்தனர். அதனால் முதலில் களமிறங்கி பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் 3 ரன்களில் ஆட்டம் இழந்தது ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

இருப்பினும் கேப்டன் பின்ச் அதிரடியாக விளையாடிய ரன்களை குவித்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 179 ரன்களை அடித்தனர். அதில் டேவிட் வார்னர் 3, பின்ச் 63, மிச்சேல் மார்ஷ் 28, மேக்ஸ்வெல் 13, மார்கஸ் ஸ்டோனிஸ் 35, டிம் டேவிட் 15*, மாத்தியூ வெட் 7* ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது அயர்லாந்து அணி. ஆனால் ஓப்பனிங் பேட்ஸ்மேனான பால் ஸ்டிர்லிங் மற்றும் கேப்டன் பால்பிரண்யே பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர்.

ஆனால் அயர்லாந்து அணியின் நம்பிக்கை நாயகன் லோர்க்கான் டக்கர்-ன் அதிரடியான ஆட்டத்தால் ரன்களை குவித்தார். ஆனால் மற்ற வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டம் இழந்த காரணத்தால் 18.1 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த அயர்லாந்து அணி 137 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால் 42 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வென்றுள்ளது ஆஸ்திரேலியா. ஒருவேளை லோர்க்கான்-க்கு ஏதாவது ஒரு வீரர் பார்ட்னெர்ஷிப் கொடுத்திருந்தால் நிச்சியமாக ஆஸ்திரேலியா அணியை வென்றிருக்க அதிக வாய்ப்புகள் அமைந்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

பா….! செம பீல்டிங் ; அதிர்ச்சியில் மூழ்கிய ஆஸ்திரேலியா வீரர் மாத்தியூ வெட் மற்றும் ஆடம் சம்ப ;

ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்த நேரத்தில், 14.2 ஓவரை அயர்லாந்து பவுலர் மார்க் அடைர் வீசினார். அதனை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா வீரர் ஸ்டோனிஸ் சிறப்பாக அடித்து காரணத்தால் பந்து சிக்ஸர் லைன் பக்கத்தில் சென்றது. அதனை எப்படியாவது தடுக்க வேண்டுமென்று முடிவு செய்த அயர்லாந்து வீரர் மெக்கார்த்தி குதித்து அந்த பந்தை தட்டிவிட்டார்.

அதனை பார்த்த ஆஸ்திரேலியா வீரர் சம்ப மற்றும் மாத்தியூ வெட் அதிர்ச்சியில் வாயடைத்து போனார்கள். இதன் வீடியோ இப்பொழுது வைரலாக இணையத்தை கலக்கி வருகிறது.

குரூப் 1 ஐ சேர்ந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 4 போட்டிகளில் விளையாடிய 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், 4 போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகளுடன் அயர்லாந்து அணி 4வது இடத்திலும் இருக்கின்றனர். ஒருவேளை அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வி பெற்று, நியூஸிலாந்து அணி இனிவரும் போட்டிகளில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் போட்டியில் வென்றால் ஆஸ்திரேலியா அணிக்கு அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பு குறைந்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here