என்ன வேணாலும் சொல்லுங்க.. இந்திய அணியில் இவர் தான் போட்டியின் வெற்றியாளர் , அதில் சந்தேகமில்லை ; தினேஷ் கார்த்திக் உறுதி..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணியை எதிர் ஐந்து டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. அதில் மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் நாளை மதியம் 4வது டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதில் முதல் இன்னிங்ஸ்-யில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 65.4 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்து 183 ரன்களை மட்டுமே எடுத்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் விளையாடிய இந்திய அணி 84.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்து 278 ரன்களை விளாசினார். பின்பு இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் விளையாடிய இங்கிலாந்து அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் 10 விக்கெட்டை இழந்து 303 ரன்களை அடித்தனர்.

பின்பு இந்திய அணி 14 ஓவர் முடிவில் 52 ரன்கள் எடுத்த நிலையில் ட்ரா செய்தனர். ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை 4வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் சமீபத்தில் அளித்த பேட்டியில் ; இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆன ரிஷாப் பண்ட், இந்த தொடரில் அதிக ரன்களை அடிக்கவில்லை. வெறும் 87 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

இருந்தாலும் கடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடினார். இவரால் நிச்சயமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை அடிப்பார். அவர் தான் போட்டியின் வெற்றியாளர் என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.