இவரது விளையாட்டு தோனியை போல இல்லை ; இன்னும் நிறைய விஷயங்கள் இவர் கற்றுக்கொள்ள வேண்டும் ; முன்னாள் வீரர் உறுதி ;

0

இந்திய கிரிக்கெட் :

கிரிக்கெட் அறிமுகம் ஆன காலத்தில் இந்திய அணிக்கு பெரிய அளவில் பெருமை இருந்ததில்லை. தொடர் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தது இந்திய. பின்னர், கபில் தேவ், கங்குலி, தோனி போன்ற வீரர்களின் கேப்டன் முயற்சியால் இந்திய அணிக்கு இப்பொழுது அசைக்க முடியாத நம்பிக்கை எழுந்துள்ளது.

ஆமாம், தோனி கேப்டனாக இருந்த காலத்தில் அனைத்து விதமான ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளிலும் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வெல்ல முக்கியமான காரணமாக இருந்துள்ளார். இதுவரை யாரும் செய்ய சாதனையை செய்துள்ளார் தோனி. ஆனால் தோனி கடந்த 2020ஆம் அவரது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

அதன்பிறகு விராட்கோலியும், இப்பொழுது ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியை வழிநடத்தி வருகின்றனர். என்னதான் கேப்டன் மாறினாலும், தோனியின் விக்கெட் கீப்பருக்கு நிகராக ஒருவரும் வர முடியாது என்பது தான் உண்மை. ஆமாம், ஏனென்றால் அசுர வேகத்தில் ஸ்டும்ப்பிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளவர் தோனி.

இப்பொழுது அந்த இடத்தில ரிஷாப் பண்ட் உள்ளார். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில் ; “நான் எப்பொழுது ரிஷாப் பண்ட் செய்யும் விக்கெட் கீப்பிங் பார்க்க அவ்வளவு ஆர்வமாக இருக்கும். ஆனால் இப்பொழுது அவர் பேட்டிங்-ல் கவனம் செலுத்துவதால் விக்கெட் கீப்பிங் சரியாக இல்லை.”

“ரிஷாப் பண்ட் எப்பொழுதும் ஸ்டம்ப் பின்னால் இன்று கொண்டு எதுவும் பெரிய அளவில் பேசமாட்டார். அவரது வேலையை எப்பொழுது கவமனாக செய்வது வழக்கம், இப்பொழுது அவரது தவறுகளை சரி செய்துகொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார், தோனியை போலவே.

ஒரு பேட்ஸ்மேனாக வெற்றி பெற்றால், பின்பு விக்கெட் – கீப்பிங் செய்வதில் எந்த பிரச்சனையும் இருக்க வாய்ப்பு குறைவு தான் என்று கூறியுள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர்.” இருப்பினும் தோனியின் சாதனைகளை முறியடித்துள்ளார் ரிஷாப் பண்ட். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து சதம் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி விக்கெட் கீப்பிங் செய்து சில விக்கெட்டை கேட்ச் செய்துள்ளார்.

ரிஷாப் பண்ட் மற்றும் தோனி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு பேச முடியுமா ? இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் யாராக இருக்க முடியும் ? காரணம் என்ன ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்….!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here