அனுபவம் வாய்ந்த இந்திய வீரர் இவரே, ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்து வருகிறார் ; முன்னாள் வீரர் பேட்டி ;

இங்கிலாந்து தொடர்:

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஐந்தாவது டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் தான் டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இரு அணிகளும் தலா 2 போட்டியில் வென்ற காரணத்தால் சம நிலையில் முடிந்துள்ளது.

விராட்கோலி :

இந்திய கிரிக்கெட் அணியில் பல வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதில் ஒருவர் தான் விராட்கோலி, சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து வீரர்களும் பார்த்து பயப்படும் அளவிற்கு அதிரடியாக விளையாடிய வந்தவர் விராட்கோலி. ஆனால் சமீப காலமாக விளையாடாமல் வருகிறார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் கேப்டன் பற்றி சர்ச்சை மிகப்பெரிய அளவில் பிசிசிஐ மற்றும் விராட்கோலி ஆகிய இருவருக்கும் பெரிய மோதல் ஏற்பட்டது.

முன்னாள் இங்கிலாந்து வீரர் பேட்டி:

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி சமீபத்தில் தான் நடந்தது. அதில் கூட விராட்கோலி 11, 20 ரன்களை அடித்துள்ளார். இதனை பற்றி பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான Geoffrey Boycott கூறுகையில் ; “விராட்கோலி எப்பொழுதும் விளையாடினாலும் பல யோசனையில் விளையாடி வருகிறார்.”

“எப்பொழுது ஒரு பந்தை முன்னே எதிர்கொண்டு விளையாட வேண்டும். அதனை முன்பே முடிவு செய்ய கூடாது. என்ன செய்ய போகிறார் என்பதை உறுதியாக யோசிக்க வேண்டும். விராட்கோலி இப்பொழுது தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடுவது இல்லை, அதனால் இன்னும் அவர் போட்டிகளில் கவமனாக விளையாட வேண்டும்.”

“அவர் செய்யும் தவறுகளை முடிந்த வரை கட்டுப்படுத்த வேண்டும். அவரது விக்கெட்டை முடிந்த வரை பாதுகாத்து தான் விளையாட வேண்டும். அதனை மட்டும் அவர் சரியாக புரிந்து கொண்டு விளையாடினால் நிச்சியமாக தவறுகள் குறையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.”

“முதலில் குறைவான ரன்களை அடிக்க நினைக்க வேண்டும். பின்பு அதில் இருந்து நம்பிக்கை வரும், அதனை பயன்படுத்தி முன்னேறி செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் Boycott.”